அண்மைய செய்திகள்

recent
-

காலி துறைமுகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு


காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. 

குறித்த கப்பலில் இருந்த ஆயுதக் களஞ்சியசாலைக்கு அனுமதிப் பத்திரம் உள்ளதா? அந்த அனுமதிப் பத்திரம் எவ்வளவு காலத்திற்கு செல்லுபடியாகும்? எந்த ஆயுதங்களுக்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது போன்ற விடயங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த ஆயுதக் களஞ்சியத்தித்தில் சுமார் 3,000 துப்பாக்கிகள் உள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பில் காலி துறைமுக பொறுப்பதிகாரியிடம் அறிக்கை கோரியுள்ளதாக துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக கொழும்பிலிருந்து ஒரு குழு புறப்பட்டுச் சென்றுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டார்.

தனியார் நிறுவனங்கள் ஆயுதங்களை நாட்டுக்கு கொண்டுவருவதினை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கடற்படை தளபதி மற்றும் இராணுவத்தளபதி ஆகியோரிடம் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
காலி துறைமுகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு Reviewed by NEWMANNAR on January 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.