டில்லியில் கடும் பனிப்பொழிவு : 21 விமான சேவைகள் இரத்து
டில்லியில் நேற்று காலை நிலவிய கடும் பனி மூட்டம் காரணமாக 21 விமான போக்குவரத்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதோடு 47 விமான சேவைகள் காலதாமதமாகியுள்ளன.
இது தொடர்பில் மேலும், தெரியவருவதாவது,
டில்லியில் தற்போது கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர்மையான காலநிலை நிலவுகின்றது. இதனால் , விமான நிலைய பகுதிகளில் 50 மீற்றர் தூரத்திற்கு மட்டுமே காட்சிகள் தெரிகின்றன. பரிதாபாத், நொய்டா மற்றும் காசியாபாத் ஆகிய நகர்ப்புறப் பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. நேற்று காலை 5.30 மணிக்கு 8 டிகிரி செல்சிஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வட மாநிலங்களான பஞ்சாப், ஆரியானா, டில்லி, மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து கடும் பனிமூட்டம் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டில்லியில் கடும் பனிப்பொழிவு : 21 விமான சேவைகள் இரத்து
Reviewed by NEWMANNAR
on
January 19, 2015
Rating:

No comments:
Post a Comment