அண்மைய செய்திகள்

recent
-

டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் நால்வர் படுகாயம்


டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 தொழிலாளர்கள் காயமடைந்தனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தெற்கு டெல்லியில் கிட்வாய் நகரில் கட்டுமான பணி நடந்துகொண்டிருந்த கட்டடம் ஒன்று இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியில் இருந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.

4 பேரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவரது நிலைமை கவலைகிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் நால்வர் படுகாயம் Reviewed by NEWMANNAR on January 29, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.