அண்மைய செய்திகள்

recent
-

செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு உத்தரவு

ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.


ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான், தபால் ஊழியர் ஒரு­வரைத் தாக்­கி­யதாக பதுளை - எல்ல பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.
பதுளை - எல்ல தபால் நிலை­யத்தைச் சேர்ந்த பெரி­ய­சாமி ஞான­சே­கரன் என்ற தபால் ஊழி­யரே இவ்­வாறு தாக்­கு­த­லுக்­குள்­ளாகி பதுளை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

குறித்த தபால் ஊழியர் எல்ல நியூபோர்ட் தோட்­டத்தில் வாக்­காளர் அட்டை தபால்­களை விநி­யோ­கித்து விட்டுத் திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­வே­ளை­யி­லேயே இவ்­வாறு தாக்­கப்­பட்­டுள்ளார்.

தன்னைத் தாக்­கும்­போது தன்­னிடம் 35 வாக்­காளர் அட்­டைகள் இருந்­த­தா­கவும், அந்த வாக்­காளர் அட்­டை­களும் தன்­னி­ட­மி­ருந்த கைய­டக்கத் தொலை­பேசி மற்றும் கழுத்­தி­லி­ருந்த தங்கச் சங்­கிலி என்­ப­வற்­றையும் காண­வில்லை எனவும் அவர் பொலிஸ் நிலை­யத்தில் முறை­பாடு செய்­துள்ளார்.

இதே­வேளை, தனது மகனின் முகத்தில் செந்தில் தொண்­டமான் தாக்­கி­ய­தா­கவும் அதன்­போது , மகன் மயங்கி வீழ்ந்­த­தா­கவும் முகத்­தி­லி­ருந்து இரத்தம் கொட்­டி­ய­தா­க­வும்­த­னது கண­வரைப் பறி­பொ­டுத்து இரண்டு மாத கால­மா­க­வில்லை. இந்­நி­லை­யி­லேயே மகன் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது என தாக்­கு­த­லுக்­குள்­ளா­ன­வரின் தாயார் கண்ணீர் மல்கத் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் செந்தில் தொண்டமான் இந்தத் தாக்குதலை தான் மேற்கொள்ளவில்லையென மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு உத்தரவு Reviewed by NEWMANNAR on January 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.