சுயமாகச் சிந்தித்து வாக்களியுங்கள்! இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
எதிர்வரும் எட்டாந் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஏற்கனவே தபால்மூல வாக்களிப்புச் செய்தவர்களை விட அனைத்து தமிழ்பேசும் அதிபர்களும், ஆசிரியர்களும் சுயமாகச் சிந்தித்து வாக்களிப்பதோடு உங்களைச் சார்ந்தவர்களையும் வாக்களிக்கச் செய்யுங்கள். இவ்வாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மற்றவர்களின் அபிலாசைகளுக்கு இடமளிக்காமல் நமக்குள்ள அரசியல் உரிமைகளை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட வழுக்கள் எமக்கு நல்ல பாடங்களைத் தந்துள்ளன. இனிவரும் காலங்களில் நாம் நிதானத்துடன் சிந்தித்து நடந்துகொள்வது மிகவும் அவசியமானதாகும். என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிபர்கள், ஆசிரியர்கள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தமது கடமைகளைச் சரிவரச் செய்யவேண்டும். எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடமளிக்கக்கூடாது. மாணவர்களுக்கு வழிகாட்டிகளாக உள்ள நாம் இந்நாட்டின் எதிர்கால சந்ததிக்கு முன்னுதாரணமாக நடந்துகாட்ட வேண்டும்.
அதிபர்களிலும் ஆசிரியர்களிலும் குறை சொல்லுகின்றவர்களுக்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. நடைபெற்ற தபால்மூல வாக்களிப்பில் அதிபர்கள், ஆசிரியர்களே தவறுகளை விட்டுள்ளார்கள் என்ற செய்தியை நாம் பொய்யாக்க வேண்டும்.
இவ்வாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயமாகச் சிந்தித்து வாக்களியுங்கள்! இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
Reviewed by NEWMANNAR
on
January 05, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 05, 2015
Rating:



No comments:
Post a Comment