மன்னார் ஜீவபுரம் கிராம மக்களை சந்தித்து குறை நிறைகளை கேட்டறிந்து கொண்ட வன்னி எம்.பி ஹுனைஸ் பாறூக்.-Photos
மன்னார் ஜீவபுரம்; கிராம மக்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்ட பிரதம அமைப்பாளருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் நேற்று(29) நேரில் சென்று சந்தித்து அந்த மக்களின் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டார்.
இதன் போது ஜீவபுரம் கிராம மக்கள், மாதர் சங்க உறுப்பினர்களையும் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த அதி மேதகு ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேனா அவர்களுக்கு வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்ததோடு அக்கிராமத்தில் தற்போது நிலவும் குறைபாடுகள் பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.
இதன் போது ஐக்கிய தேசியக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.பஸ்மி அவர்களும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் ஜீவபுரம் கிராம மக்களை சந்தித்து குறை நிறைகளை கேட்டறிந்து கொண்ட வன்னி எம்.பி ஹுனைஸ் பாறூக்.-Photos
Reviewed by NEWMANNAR
on
January 30, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 30, 2015
Rating:
.jpg)


No comments:
Post a Comment