மேல், வடமேல் மற்றும் தென் மாகாண ஆளுநர்கள் இராஜினாமா செய்துள்ளனர்
வடமேல், தென் மற்றும் மேல் மாகாண ஆளுநர்கள் இன்று தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளனர்.
வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ ஆர் பலல்ல இன்று தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு தொலை நகல் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
இதனையடுத்து தனது அதிகாரிகளை அழைத்து நன்றி தெரிவித்து விட்டு அளுநர் அலுவலகத்தில் இருந்து பலல்லே வெளியேறி சென்றுள்ளார்.
இதனிடையே மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலான தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
தென் மாகாண ஆளுனர் குமாரி பாலசூரிய பதவி விலகினார்
தென் மாகாண ஆளுனர் குமாரி பாலசூரிய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆளுனர் குமாரி பாலசூரிய தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த தகவலை தென் மாகாண ஆளுனர் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் குமாரி பாலசூரிய தென் மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆளுனர்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அநேகமான மாகாணங்களின் ஆளுனர்கள் பதவியை ராஜினாமா செய்ய ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பக்கச்சார்பாக செயற்பட்டதாக சில ஆளுனர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேல், வடமேல் மற்றும் தென் மாகாண ஆளுநர்கள் இராஜினாமா செய்துள்ளனர்
Reviewed by NEWMANNAR
on
January 19, 2015
Rating:

No comments:
Post a Comment