குட்டித் தூக்கம் போடுவது கல்வி கற்பதற்கு மிகச் சிறந்தது; ஆராய்ச்சி முடிவு
வாழ்க்கையின் மிக இளம் பராயத்தில் கல்வி கற்பதற்கு முக்கியமாக உதவுவது அவ்வப்போது குட்டித் தூக்கம் போடுவதே என்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
குழந்தைகள் புதிய தகவல்களை கிரகித்துக்கொண்டவுடன் தூங்கப்போனால் அவை அந்தத் தகவல்களை நல்ல முறையில் புரிந்துகொள்கின்றன என்று தேசிய அறிவியல் கழகத்தினால் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை ஒன்று கூறுகின்றது.
12 மாதத்துக்குட்பட்ட 216 குழந்தைகளுக்கு புதிய வேலைகளை கை பொம்மைகள் மூலம் செய்ய விஞ்ஞானிகள் கற்றுக்கொடுத்தார்கள்.
இந்த விளையாட்டு நேரம் முடிந்தவுடன் நான்கு மணிநேரத்துக்குள் தூங்கிய குழந்தைகளால் அடுத்த நாள், அவர்கள் கற்றுக்கொண்டவற்றில் பாதியை நினைவில் வைத்துக்கொள்ள முடிந்தது.
ஆனால் தூங்காத குழந்தைகளால் ஒன்றையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் ஏன் குழந்தைகள் அவைகளின் பெரும்பாலான நேரத்தை தூங்கியே கழிக்கின்றன என்பதையும், தூங்கப்போகுமுன் அவைகளுக்கு படித்துக்காட்டுவதன் முக்கியத்துவத்தையும் விளக்க உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
குட்டித் தூக்கம் போடுவது கல்வி கற்பதற்கு மிகச் சிறந்தது; ஆராய்ச்சி முடிவு
Reviewed by NEWMANNAR
on
January 19, 2015
Rating:

No comments:
Post a Comment