பெரும்பாலான மாவட்டங்களில் நாற்பது வீத வாக்குப்பதிவு
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பாலான மாவட்டங்களில் 40 வீதமாக வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். வாக்காளர்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக கொழும்பு தெரிவத்தாட்சி அதிகாரி கமல் பத்மசிறி குறிப்பிட்டார்.
இதுவரையில் 35 வீதமானவர்கள், தமது வாக்குகளை பதிவுசெய்துள்ளதாக வன்னி தெரிவத்தாட்சி அதிகாரி பந்துல ஹரிஸ்சந்திர சுட்டிக்காட்டினார். பொலன்னறுவை மாவட்டத்தில் இதுவரையில் 41 வீதமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 35 வீதமான வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரி ஆர்.சி.டி சொய்சா குறிப்பிட்டார். பதுளையில் 40 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரி ரோஹன கீர்த்தி திஸாநாயக்க கூறினார்.
நுவரெலியா மாவட்டத்தில் 50 வீதமானவர்கள் தமது வாக்குகளை பதிவுசெய்துள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரி டி.பி.ஜி குமாரசிறி சுட்டிக்காட்டினார்.
கண்டி மாவட்டத்தில் 40 வீதமான வாக்குகளும், மாத்தறையில் 34 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
பெரும்பாலான மாவட்டங்களில் நாற்பது வீத வாக்குப்பதிவு
Reviewed by NEWMANNAR
on
January 08, 2015
Rating:

No comments:
Post a Comment