அண்மைய செய்திகள்

recent
-

சட்டவிரோதமாக தேர்தல் பிரச்சாங்களில் பிள்ளையான்: த.தே.கூ பெரரல் அமைப்பிடம் முறைப்பாடு


தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணாக ஜனாதிபதியின் ஆலோசகர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வாகரைப் பகுதியில் நேற்று பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டடைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வன் பெப்ரல் அமைப்பிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது “ஜனாதிபதி தேர்தலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் மற்றும் அவர்களது குழுவினர், பாதுகாப்பு படையினர் வியாழக்கிழமை (08) காலை 10.15 மணியளவில் வாகரை பிரதேசத்தில் உள்ள அம்பந்தனாவெளி வம்மிவட்டவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பெரும் திரளாக நின்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இதேவேளை இச்செய்தி கிடைத்து இதன் உண்மைத் தன்மையை பார்வையிடுமாறு அப்பகுதி வீதி வழியாக எனது வாகனம் மூலம் சென்ற போது இவ்விடயம் உண்மையாக காணப்பட்டது. சி.சந்திரகாந்தன் சிறிது தூரத்திற்கு அப்பால் வீதியில் நின்ற எனது வாகனத்தை நோக்கி தனது குழுவினர், படையினர் சகிதம் வருகை தந்து எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தனர்.

இவ்வேளை வாகரை பொலிஸ் பகுதியை சேர்ந்த எஸ்.ஐ.ஆக உள்ள டபிள்யூ.எம்.நவரெட்ண என்பவர் சி.சந்திரகாந்தன் மாகாண சபை உறுப்பினருக்கு ஆதரவாக இருந்தார். இவர்கள் யாவரும் அவ்விடத்தில் எனக்கு பலவாறு பேசி கூச்சலிட பொலிஸ் உத்தியோகத்தர் எதுவும் பேசவில்லை.

வாகரை பிரதேசத்தின் வாக்குச் சாவடிக்கு முன்னால் பல இடங்களில் (பிள்ளையானின் பிரச்சார குழு) மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தனின் குழுவினர் வெற்றிலைக்கு புள்ளடியிடுமாறு மக்களை வலியுறுத்துகின்றனர்.

இவ்விடயமாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்பாக வேண்டுகின்றேன்” என அந்த முறப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.



சட்டவிரோதமாக தேர்தல் பிரச்சாங்களில் பிள்ளையான்: த.தே.கூ பெரரல் அமைப்பிடம் முறைப்பாடு Reviewed by NEWMANNAR on January 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.