மன்னாரில் வாக்குப்பெட்டிகள் மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைப்பு-Photos
மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது 68.5 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.
காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவுகள் மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.
மன்னார் மாவட்டத்தில் 70 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புக்கள் இடம் பெற்றது.மன்னார் மாவட்டத்தில் 79232 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
வாக்களிப்பு நிலையங்களில் இருந்து இன்று(8) மாலை 4.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது.
மன்னார் மாவட்ட செயலகத்திற்கு செல்லும் பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 06 வாக்கு என்னும் நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளது.
மன்னாரில் வாக்குப்பெட்டிகள் மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
January 08, 2015
Rating:
No comments:
Post a Comment