மன்னாரில் அமைதியான முறையில் தேர்தல்.- Photos
மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம் பெற்றது.மாலை 2 மணிவரை மன்னார் மாவட்டத்தில் 62 வீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
வன்முறைச்சம்பவங்கள் எதுவும் இடம் பெறவில்லை.மன்னார் வங்காலையில் அரச தரப்பு முக்கியஸ்தர் ஒருவர் மது பானங்களை இன்று வியாழக்கிழமை காலை அங்குள்ள மக்களுக்கும்,இளைஞர்களுக்கும் வழங்கியமையினால் சிறிது பதற்ற நிலை ஏற்பட்டது.
காலை 7 மணி முதல் 11 மணிவரை வக்களிக்கும் வீதம் குறைவடைந்த நிலையில் காணப்பட்டது.
பின் 11 மணியில் இருந்து மாலை 4 மணிக்குள் வாக்களிப்பு வீதம் அதிகரித்தது. போக்கு வரத்து வசதிகள் மந்த கதியில் காணப்பட்டமையினால் வாக்காளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
மன்னாரில் அமைதியான முறையில் தேர்தல்.- Photos
Reviewed by NEWMANNAR
on
January 08, 2015
Rating:
No comments:
Post a Comment