மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிதியத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு.-Photo
அண்மையில் பெய்த அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மன்னார் மாவட்டத்தில் பாதீக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு, லைக்காவின் ஞானம் அறக்கட்டளை வழங்கும் நிவாரணப் பணிகள் நேற்று திங்கட்கிழமை(5); ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் மன்னார் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட தம்பனைக்குளம் மற்றும் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பரிகாரிக்கண்டல்,பொன்தீவு கண்டல்,அச்சங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1500 குடும்பங்களுக்கு இவ்வாறு நிவாரணப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, தேயிலை, பதப்படுத்தப்பட்ட மீன், பால்மா, பிஸ்கட் மற்றும் குழந்தைகளுக்கான பால்மா அடங்கலான உலர் உணவுப் பொதியொன்றும், சவர்க்காரம், பற்பசை, நுளம்புச் சுருள்கள், டெட்டோல், பவுடர், சீப்பு மற்றும் பெண்களுக்கான சானிடரி நாப்கின்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய சுகாதாரப் பொதியொன்றும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், படுக்கை விரிப்புக்கள், துவாய் மற்றும் நுளம்பு வலை ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
-குறித்த நிகழ்வில் மடு பிரதேசச் செயலாளர் சத்திய சோதி,கிராம அலுவலகர்கள்,ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் மாவட்ட இணைப்பாளர்,பணியாளர்கள் ஆகியோர் இணைந்து குறித்த பொருட்களை வழங்கி வைத்தனர்.
லைக்காவின் ஞானம் அறக்கட்டளை கடந்த காலங்களில் சுயதொழில் முயற்சிகளுக்கான உபகரணங்களை வழங்கியமை, வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிணறுகளை அமைத்துக் கொடுத்தமை, கற்றல் தேவையுடைய வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 1500 குடும்பங்களுக்கு லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிதியத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு.-Photo
Reviewed by NEWMANNAR
on
January 06, 2015
Rating:

No comments:
Post a Comment