அண்மைய செய்திகள்

recent
-

வாக்­க­ளிப்­ப­தற்கு விடு­முறை வழங்க மறுக்கும் தொழில்தரு­நர்கள் மீது சட்ட நட­வ­டிக்கை

வாக்­க­ளிப்­ப­தற்கு விடு­முறை வழங்க மறுக்கும் தொழில்தரு­நர்கள் மீது சட்ட நட­வ­டிக்கை சௌமிய இளைஞர் நிதியம் அறி­விப்பு வெளிமா­வட்­டங்­களில் தொழில்­பு­ரியும் மலை­ய­கத்தைச் சேர்ந்த இளைஞர், யுவ­தி­க­ளுக்கு வரும் எட்டாம் திகதி நடை­பெறும் ஜனா­தி­பதி தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்கு விடு­முறை வழங்க தொழில் தரு­நர்கள் மறுக்கும் பட்­சத்தில் சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்று தேர்தல் ஆணை­யா­ள­ரு­ட­னான சந்­திப்பின் போது தெரி­வித்­த­தாக சௌமிய இளைஞர் நிதி­யத் தின் தலைவர் எஸ்.பி. அந்­தோ­னி­முத்து தெரி­வித்­துள்ளார்.



வெளிமா­வட்­டங்­களில் தொழில்­பு­ரியும் மலை­ய­கத்­தைச்­சேர்ந்த இளைஞர், யுவ­தி­க­ளுக்கு வரும் எட்டாம் திகதி நடை­பெறும் ஜனா­தி­பதி தேர்­தலில் வாக்­க­ளிப்­ப­தற்கு விடு­முறை வழங்க தொழில் தரு­நர்கள் பலர் மறுத்து வரு­வ­தாக தெரிய வரு­கின்­றது. இதன் கார­ண­மாக கொழும்பு கண்டி தம்­புள்ள மற்றும் வடக்கு, கிழுக்கு மாவட்­டங்­களில் தொழில் புரியும் மலை­ய­கத்தைச் சேர்ந்த சுமார் இரண்டு லட்­சத்­திற்கு மேற்­ப ட்ட இளைஞர், யுவ­திகள் வாக்­க­ளிப்­ப­தற்­கான சந்­தர்ப்­பத்தை இழக்­கின்­றனர். ஜன­வரி எட்டாம் திகதி வியா­ழக்­கி­ழமை என்­பதால் 9, 10, 12ஆம் திகதிகள் வார விடு­மு­றை­க­ளுடன் 15ஆம் திகதி தைப்­பொங்கல் வரு­வதன் கார­ண­மாக விடு­மு­றையில் வீட்­டிற்கு செல்லும் பலர் வேலைக்கு திரும்­பி­வர மாட்­டார்கள். இதனால் தமது வியா­பாரம் பெரும் பாதிப்­பி­ற்­குள்­ளா­கலாம் என்­பதால் விடு­முறை வழங்க மறுப்­ப­தாக தெரி­ய­ வ­ரு­கின்­றது.

குறிப்­பிட்ட இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக தேர்தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரி­யவை தனது காரி­யா­ல­யத்தில் கடந்த வெள்ளிக்­கி­ழமை நேரடியாகச் சந்­தித்த சௌ மிய இளைஞர் நிதி­யத்தின் தலைவர் எஸ்.பி.அந்­தோ­னி­முத்து நிலை­மை­களை விளக்கி­ய­துடன் உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கேட்­டுக்­கொண்டார். 1981ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனா­தி­பதி தேர்­தல்கள் சட்­டத்தின் 110ஆம் பிரிவின் பிர­காரம் தொழில் தரு­நர்கள் தங்­க­ளது தொழி­லா­ளர்­க­ளுக்கு விடு­முறை வழங்க வேண்டும் என்று அந்­தோ­னி ­முத்­து­விடம் தெரி­வித்த தேர்தல்கள் ஆணையாளர் விடு­முறை வழங்க மறுப்­ப­ வர்கள் சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்றும் குறிப்­பி­ட்­டுள்ளார்.

இதேநேரம் விடு­முறை வழங்க மறுக்கும் தொழில் தரு­ந­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க முன்­வந்­துள்ள சௌமிய இளைஞர் நிதியம் விடு­முறை வழங்க மறுக்கும் தொழில் தரு­நர்கள் சம்­பந்­த­மாக தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு நிதியத் தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து கேட்டுள்ளார். தகவல் தர வேண்டியவர்கள் 0773059167 தொலைபேசி இலக்கம் மற்றும் amuthu19@yahoo.com (link sends e-mail) ஈமெயில் ஊடாக தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.
வாக்­க­ளிப்­ப­தற்கு விடு­முறை வழங்க மறுக்கும் தொழில்தரு­நர்கள் மீது சட்ட நட­வ­டிக்கை Reviewed by NEWMANNAR on January 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.