அண்மைய செய்திகள்

recent
-

இனவாதம், மதவாதம் பேசி அரசியல் நடாத்தும் கலாச்சாரத்தை கைவிடுங்கள்-நகர உறுப்பினர் நகுசீனின் கருத்துக்கு நகர சபை உறுப்பினர் குமரேஸ் பதிலடி.


முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட போராட்ட அரசியல் அனுபவம் கொண்ட எமக்கு நீங்களோ  உங்கள் கட்சியோ அரசியல் கற்றுத் தர முற்பட வேண்டாம்.என மன்னார் நகர சபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் நகர சபை உறுப்பினர் என். நகுசீன் வெளியிட்டுள்ள கருத்திற்கு பதில் வழங்குகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மன்னார் நகர சபை உறுப்பினர் இ.குமரேஸ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,


என்னால் வெளியிடப்பட்ட செய்தியில் எந்த இடத்திலாவது இனவாதம் அல்லது மதவாதம் பற்றிக் குறிப்பிட்டுள்ளதை கண்டீர்களா?

இம் மாவட்டத்தில் இனவாதம் மதவாதம் யாரால், எந்த ஆட்சியில் எந்த காலத்தில் எப்படி வந்தது என்று அனைத்து மக்களுக்கும் நன்கு தெரியும்.
உங்கள் பல்லை நீங்களே குற்றிப்பார்க்க வேண்டாம். உமது அறிக்கையில் இனவாதம் மிகத்தெளிவாகத் தெரிகின்றது.

நான் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனது மக்களின் விருப்பு வெறுப்பு ஆக்கங்களை புதிய அரசிற்கு தெரியப்படுத்தவது எனது தார்மீகப்பணியும் கடமையுமாகும்.

அதற்கு பதிலளிக்க வேண்டியது நடைமுறையிலுள்ள புதிய அரசே தவிர நீரோ உமது கட்சியோ அல்ல.

நீங்கள் வீணாக அரசியல் தெரியாது மூக்கை நுழைத்ததினால் தான் உம்மை நோக்கி இவ் அறிக்கையை விடுக்கின்றேன். அதுவும் மிகவும் சுருக்கமாக சிலவற்றை மட்டும் உங்களது பாணியிலே கேட்கின்றேன்.

துறை சார் அமைச்சர் ஒருவர் முழு இலங்கைக்குமா? அல்லது தனி ஒரு மாவட்டத்திற்கா? வன்னிக்கு மட்டும் தனிச்சட்டம் போட்டு அனைத்துத் துறைகளுக்கும் ஒரே அமைச்சரா? தனித்தனி அமைச்சர்கள் இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் முழு இலங்கைக்கும் உரியவர்கள் என்றால் மன்னாரில் மட்டும் அனைத்து துறைகளிலும் ஒரே அமைச்சர் கையடிப்பது எவ்வாறு?

ஏனைய துறைகளிலே மதவாச்சிக்கு அப்பால் சென்று கல்வியிலோ, சுகாதாரத்திலோ, போக்குவரத்திலோ, சமூர்த்தியிலோ ஏனைய துறைகளிலோ இதே அமைச்சரால் கையடிக்க முடியுமா? மக்கள் சார்பாக இவற்றை தட்டிக்கேட்டால் நாங்கள் இனவாதம் பேசி நாகரீகமில்லாத அரசியல் செய்கின்றோம் என கூக்குரல் இடுகின்றீர்கள்.

நான் விட்ட அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்களான காணி அபகரிப்பு, சமூர்த்தி நியமனம், சமுர்த்தி நிவாரணம் உள்ளூராட்சி மன்றங்களின் அனுமதி பெறாமல் மக்கள் இல்லாத இடங்களில் குளங்கள் மற்றும் வீதிகள் அமைத்த செயற்பாடுகள் மன்னாரில் முன்னெடுப்புக்களுக்கு முட்டுக்கட்டையாகச் செயல்பட்டமை அதிகாரத்தினைப் பாவித்து மிரட்டி அரச உத்தியோகத்தர்களை தவறாக பாவித்தது, சமுர்த்தி ஊழியர்களை அரசியலில் ஈடுபடுத்தி அதுவும் உங்கள் கட்சிப் பத்திரங்களைக்கொடுத்து அதிகார துஸ்பிரயோகங்களை கடந்த ஆட்சியில் செய்ததை உங்களால் நியாயப்படுத்தவோ அல்லது மறுதலிக்கவோ முடியுமா?

தாங்களும் இதில் பங்காளி என்ற படியால் உம்மைப்பற்றி சிலவற்றினை ஞாபகப்படுத்த வேண்டி உள்ளது.

.அரசியலுக்கு வருகின்றவர்கள் தங்கள் பதவிகளைத் துறந்;து பொது நோக்குடன் வருவார்கள். நீங்களோ அரசியலுக்கு வந்தபின்னரே அரசியல் அதிகாரத்தினைப் பயன்படுத்தி சமுர்த்தி உத்தியோதத்தர் நியமனத்தினையும் பெற்று குறுகிய காலத்திலேயே பதவி உயர்வும் பெற்றுள்ளீர்கள். அதுவும் எப்படி பெற்றுள்ளீர்கள்

• நகர சபை உறுப்பினராக இருந்து கொண்டே நகர சபைக்கு கல்லெறிந்து சேதப்படுத்தியது மட்டுமல்லாது நீதிமன்ற கல்லெறிந்து தாக்குதலிலும் ஈடுபட்டதற்கான குற்றச்சாட்டில் நீதின்றில் வழக்கு நிலுவையிலுள்ள போது இக் காலப்பகுதியில் சமுர்த்தி உத்தியோகத்தராக நியமனம் பெற்றது எவ்வாறு?


• நான்கு மாதங்கள் சபை அமர்வுகளுக்கு வராமல் பதவியே பறி போனது. அந்த இடத்திற்கு அடுத்த நிலையில் உள்ளவரே வந்திருக்க வேண்டும். இப்போதும் நீங்களே உறுப்பினராக இருப்பது எவ்வாறு! நகர சபையில் ஏழு உறுப்பினர்கள் இருக்க உங்களுக்கு மட்டும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இரண்டு வழங்கப்பட்டிருப்பது எவ்வாறு? இது அமைச்சரின் சிபாரிசினாலா? இவை அதிகார துஸ்பிரயோகம் இல்லையா?

கடந்த கால அதிகார துஸ்பிரயோகங்களை புதிய அரசிற்கு தெரியப்படுத்துவது தவறா? எனவே இனியாவது வங்குறோத்து அரசியலினை விட்டு மக்களுக்கு மக்கள் நலன் சார்ந்து செயற்படுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன். தொடந்தும் தேவையற்ற முறையில் மிகவும் கீழ்த்தரமான அறிக்கைகளை விடமாட்டீர்கள் என நம்புகின்றேன்.

எஸ். றட்ணசிங்கம் குமரேஸ்
நகர சபை உறுப்பினர், மன்னார்


தொடர்புபட்ட செய்திகள் 

இ.குமரேஸ் செய்தி தொடர்பாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் நிலாமுதீன் நகுசீன் வெளியிட்டுள்ள அறிக்கை 

மன்னாரில் பல முறைகேடுகளை மேற்கொண்ட அமைச்சருக்கு எதிராக புதிய அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும்-இ.குமரேஸ்.



இனவாதம், மதவாதம் பேசி அரசியல் நடாத்தும் கலாச்சாரத்தை கைவிடுங்கள்-நகர உறுப்பினர் நகுசீனின் கருத்துக்கு நகர சபை உறுப்பினர் குமரேஸ் பதிலடி. Reviewed by NEWMANNAR on January 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.