30 ஆண்டுகளாய் மெழுகுதிரி உற்பத்தியில் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ள சுயதொழில்முயற்சியாளர் செ-இயேசுதாசன் அவர்களின் இதயத்திலிருந்து
மன்னார் இணையத்தின் விம்பம் பகுதியில் சுயதொழில் முயற்சியாளர்கள் தேடலில் சுடர் வீசுபவர் செ-இயேசுதாசன் அவர்களின் இதயதத்தில் இருந்து ...................
“மன்னார் மின்சாரம் இன்றிப் போகும் சந்தர்ப்பத்தில் எனது மெழுகுதிரியின் உற்பத்தியால் ஒளியூட்டுவேன்”
“கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” இவ்வாக்கின் அர்த்தம் புரிந்தவராய் உயிர்வாழும் வரை உழைக்க வேண்டும் உழைப்பதற்கு பல வழிகள் உண்டு ஆம் இன்றைய எமது கதாநாயகன் அதுவும் சுயதொழில்முயற்சியாளன் ஒரு வெற்றியாளன் தைரியமாய் மெழுகுதிரி உற்பத்தியில் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ள சும்மா அல்ல சுமார் 30 ஆண்டுகளாய் ஓரே தொழிலில் நிலைத்து நிற்கும் ஓர் சுயமுயற்சியாளன் ஓய்வூதியம் பெறும் அரச சாரதி செ-இயேசுதாசன் அவர்களை மன்னார் இணையத்திற்காக…………
தங்களைப்பற்றி?
எனது சொந்த இடம் யாழ்ப்பாணம் மாதகலைச்சேர்ந்தவன் என்னோடு சேர்த்து எனது சகோதரர்கள் 5பேர் எனக்கு 13 வயது இருக்கும் போது எங்களது தந்தை எங்களை விட்டு இறந்து போனார் அப்பா இல்லை என்றால் அக்குடும்பத்தின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை சொல்லத் தேவை இல்லை துன்பத்திலும் துன்பம் துவண்டு போனோம்.
உங்கள் இளமைக்காலம் பற்றி?
சொல்லவே தேவையில்லை அவ்வளவு துன்பம் கல்வியில் நான் நன்றாக படிப்பேன் நிறைய திட்டங்கள் வைத்திருந்தேன் எனது அப்பாவின் இறப்பு எல்லாவற்றையும் தலைகீழாக்கி விட்டது. ஆப்போது எனது மூத்த சகோதரன் உயர்தரம் கற்றுக்கொண்டு இருந்தார். எனக்கு கீழ் 3 சகோதரிகள் நான் எனது அண்ணனிடம் சொன்னேன் நீங்கள் நான்கு பேரும் படியுங்கள் நான் வேலைக்குப்போய் குடும்பத்தை பார்க்கிறன் என்று இல்லையென்றால் எல்லோருடைய படிப்பும் அரைகுறையாகிப்போகும் முதலில் மறுத்தவர்கள் பின்பு …….
அந்தச்சிறுவயதில் முதலில் நீங்கள் செய்த தொழில்?
இந்தச் சமுதாயத்தில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் கடின உழைப்பால் மட்டும் தான் முடியும் என்பதை உணர்ந்தேன். 8ம் தரத்தோடு கல்வியை நிறுத்தி 13வயதில் கடற் தொழிலில் இறங்கினேன்.பல தொழில்கள் செய்துன்ளேன்.
நீங்கள் சாரதியானது எப்படி?
சிறுவயதில் கடற்தொழில் செய்து வந்ததாலும் எனது எண்ணம் அப்போதையபடிப்பான (JPO) கல்வியினை கற்று மெக்கானிக்காக வரவேண்டும் என நினைத்தேன் அதுவும் நிறைவேறவில்லை அடுத்த திட்டமான அப்பா சாரதியாக இருந்த படியால் நானும் சாரதியாகப் போகலாம் என்ற எண்ணத்தினை நிறைவேற்றினேன். 18வயதில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்று 22வயதில் மன்னார் கச்சேரியில் சாரதியாக வேலை கிடைத்தது. அத்தோடு 1978 ல் 33 வயதில் திருமணமும் செய்துகொண்டேன். இனிய குடும்பத்துணைவி அழகான பிள்ளைகள் ஆண்டவன் அருளியவை எல்லாம்.
அரச சாரதியான நீங்கள் எப்படி மெழுகுதிரி உற்பத்தியாளனாக மாறினீர்கள்?
அன்று அடிக்கடி ஏற்படுகின்ற இனக்கலவரங்கள் வன்முறைகளினால் வாழ்க்கை இயல்பு நிலை பாதிக்கப்பட்டது எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும்தான் விறகும் வெட்டி விற்றுள்ளேன் தீடிரென சுகயினமுற்று எனது அண்ணன் வீட்டிற்கு யாழ்ப்பாணம் போனபோது. அண்ணன் ஏன் நீ இப்படி கஸ்ரப்படுகிறாய் நான் உனக்கு பணம் தந்து உதவி செய்கிறேன். என்றார் நான் அண்ணணுக்கு சொன்னேன் ஒரு முறை கேட்டால் தருவீர்கள் இரண்டாம் முறை கேட்டால் மூக்கைசுழிப்பீர்கள். மூன்றாம் முறை கேட்டால் இரத்தபாசம் அறுந்து விடும் என்றேன். ஆனபடியினால் இறைவன் விட்ட வழி இது நீங்கள் இதை நினைத்து கவலைப்பட வேண்டாம் என்றேன். நான் சின்ன வயதில் உழைத்து அவர்களை படிக்க வைத்தது வீட்டு செலவினை அம்மாவோடு சேர்ந்து கவனித்தனான் அதை எண்ணித்தான் அண்ணன் அவ்வாறு கேட்டார் நான் அப்படி சொன்னது அவருக்கு மிகவும் வேதனையை உண்டாக்கியது.அப்படியே உறங்கிவிட்டோம் அதிகாலையில் மீண்டும் தம்பி நீ மெழுகுதிரி உற்பத்தி செய்யாலாம் தானே என ஆலோசனையும் நம்பிக்கையும் தந்தார்.
முதல் மெழுகு உற்பத்தி பற்றி?
அண்ணனின் ஆலோசனையின்படி கோயில்களில் மிஞ்சிக்கிடக்கின்ற மெழுகளை எடுத்து கொழும்பில் கொச்சிக்கடை அந்தோனியார் கோயிலில் விற்பார்கள் மெல்லிய வார்த்திரி போலதான் முதலில் செய்தேன். சாவற்கட்டு அன்னைவேளாங்கன்னி கோயிலிலும் காட்டாந்தோனியார் கோயிலிலும் தான் விற்று வந்தேன். கோயில் தேவைக்கு மட்டும் தான் வாங்குவார்கள் வேறு தேவைக்கு வாங்குவததில்லை மற்ற மெழுகுதிரி செய்ய பல முயற்சிகள் எடுத்தன் பலனாக எனது தொட்டமகன் யோகதாஸ் மூலமாக யாழ்ப்பாணத்தில் பெரியமெழுதிரி செய்யும் அச்சு இருப்பதை அறிந்து எனது நண்பரின் உதவியுடன் அந்த அச்சினை விலைக்கு வாங்கினேன் புதிய அச்சை வாங்கியவுடன் மெல்லிய கோயில் மெழுகுதிரியை நிறுத்திவிட்டு மொத்த கொழும்பு மெழுகுதிரியினை உற்பத்தி செய்ய ஆரம்பித்தேன்.

ஆரம்பத்தில் உங்கள் உற்பத்தியை ஏற்றுக்கொண்டார்களா?
இல்லை என்று தான்சொல்ல வேண்டும் உள்ளுர் உற்பத்திகளை யாருமே கண்டு கொள்வதுமில்லை ஏற்பதுமில்லை கிண்டல்கள் கேலிகள் சுரண்டல்கள் ஒரு தடவையல்ல பல தடைவை ஒரு பைக்கற் மெழுகுதிரியை விற்பதற்கு பல மைல்கள் சைக்கிள் ஓடியிருக்கிறேன் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறேன் இயேசுநாதரையே அவர்பிறந்த ஊரில் மதிக்கவில்லையென பைபிளில் கூறப்படுகிறது நான் மட்டும் எம்மாத்திரம்.-------
உங்கள் மெழுகுதிரிக்கு கிராக்கி தட்டுப்பாடு ஏற்பட்டதுண்டா?
ஆம் ஒரு தடவையல்ல பல தடவைகள் ஏற்பட்டு இருக்கின்றது 1996-97 காலப்பகுதிகளில் ஒரு தடவை மின்சாரத்தடை (Power Cut) அத்தருணத்தில் ஒட்டு மொத்த மன்னாருக்கே நான் தான் மெழுகுதிரி கொடுத்தேன் என்றால் பாருங்கள் இரவு பகல் பாராமல் மக்களுக்காக உழைத்தேன். இருளை அகற்றி ஒளியை கொடுப்பதற்காக அன்றைய சூழ்நிலையில் முக்கிய தேவையாக இருந்தது.
உங்கள் மெழுகு உற்பத்திக்கான மெழுகினை எவ்வாறு பெறுவீர்கள்?
கொழும்பில் இருந்து மொத்தமாக கொள்வனவு செய்தல் மெழுகில் பல வகைகள் ரகங்கள் உண்டு பற் பல தேவைகளுக்கு பயன்படுகின்றது.
மெழுகுதிரியின் தேவை பற்றி கூறுங்களேன்?
எனது கணிப்பின்படி இந்த மெழுகுதிரியை மூன்று தேவைக்காக பாவிக்கின்றார்கள் 1-சிலர் கோயில் நேர்த்திகடனுக்காக கொளுத்துவார்கள் அது சும்மா எரியும். 2-பல கிறிஸ்த்தவர்கள் இரவு நேரத்தில் செபமாலை திருமணித்தியாலம் தேவநற்கருணை வழிபாடு மெழுகுதிரியினை ஏற்றி மனமுருகி மன்றாடுவார்கள். 3-மின்சாரம் இல்லாதபோது பாவிப்பார்கள் என மூன்று வர்க்கமாக பாவித்தாலும் 1ம்-வர்க்கத்தினர் எப்படி எரிந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணம் 2ம்-3ம் வர்க்கத்தினர் எப்படி எரியுது என்ன மாதிரி எரியுது என்பதைக் கணக்கில் எடுப்பார்கள் தரமும் நிறைவும் தான் உற்பத்தியின் உயர் நோக்கு.
உங்கள் மெழுகுதிரி உற்பத்தியின் தரம் பற்றி?
நான் கத்தோலிக்கனாக இருப்பதால் கடவுளுக்கு துரோகம் செய்ய மாட்டேன். என்னுடைய மெழுகுதிரி குறைந்தது 50-60 நிமிடங்கள் வரை எரியும். என்பதை உறுதியாய் சொல்கிறேன். தரமான மெழுகுடன் என்னுடைய உழைப்பும் நேர்மையும் சேர்ந்ததுதான் எனது மெழுகுதிரி உற்பத்தியாகும். வேறு மாவட்டங்களில் இருந்து வருகின்ற பொருட்களை கொள்வனவு செய்வார்கள் அதில் இருக்கின்ற குறைகளை கண்டு கொள்ளவும் மாட்டார்கள் கேள்வி கேட்பாரும் இல்லை ஆனால் உள்ளுர் உற்பத்தி என்றால் எங்கு கண்டாலும் என்ன அண்ணே உங்கட மெழுகுதிரி கெதியா உருகுது நூருது வளையுது இப்படியான பல கேள்விகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். மக்களின் தேவை கருதி என்ன அளவில் என்ன விதமான வகையில் வேண்டுமானாலும் நேர்த்தியான முறையில் செய்து கொடுப்பேன்.
உங்கள் மெழுகுதிரியினை சந்தைப்படுத்தலும் வியாபாரமும் பற்றி?
சந்தைப்படுத்தல் தான் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சரியான வரவேற்பு என்பது இல்லை மின்சாரப்பாவனை இல்லாத நேரத்திலும் யுத்த காலத்திலும் மெழுகு தடைசெய்யப்பட்டு இருந்த காலத்திலும் கடவுள் புண்ணியத்தோடு தள்ளாடி ஆமிப்பெரியவரோடு எனது தொழிலின் தன்மையை விளங்கப்படுத்தி குறிக்கப்பட்ட அளவிற்கு மெழுகுதிரியினை பெற்று மோசமான சூழ்நிலையிலும் மன்னாரில் இருந்த அனைத்து கடைகளுக்கும்மெழுகுதிரி போட்டேன் தற்போது அதைப் பலரும் மறந்து விட்டார்கள் சிலர் இன்னும் மறக்கவில்லை இவை எல்லாவற்ரையும் விட கடவுளின் நியதி ஒன்று உள்ளது தானே இவருக்கு இவ்வளவு தான் என்ற அளவு உள்ளதே.
ஒருவன் வாழ்க்கையில் முன்னேற என்ன செய்யவேண்டும்?
ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் கடின உழைப்பும் வீண்விரையங்களை தவிர்ப்பதாலும் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். அதே வேளை எந்தத் தொழிலாக இருந்தாலும் முதலில் ஆர்வம் இருக்க வேண்டும். அன்று 13வயதில் தொடக்கம் இன்று 70 வயது வரை எத்தனையோ தொழில் செய்து இருக்கிறேன் இன்னும் உழைத்துக்கொண்டு தான் இருக்கிறேன் இன்னொன்று எவனொருவன் தனது குடும்பம் தாய் தந்தை அண்ணன் தங்கை நேசத்துடன் பற்றுக் கொண்டவன் அயராது உழைப்பான்.

உங்கள் கல்வி தடைப்பட பிரதான காரணம் எதுவாகும்?
எனது கல்வி தடைப்பட பிரதானமான காரணமாக அமைவது இளமையில் ஏற்பட்ட வறுமை அடுத்ததாக எனது தந்தையின் இறப்பு இவ்விரண்டும் தாக்கியதால் எனது கல்வி---? ஆனாலும் என்னை படிக்கவைப்பதற்கு எல்லோருமே முன்வந்தார்கள் நான் படித்த பள்ளிக்கூடமும் பேனா மை முதற்கொண்டு அத்தனையும் தருகிறோம் என்றது. என்றால் அவ்வளவிற்கு நான் படிக்க கூடிய மாணவன் ஆனாலும் நான் படிக்க முன்வரவில்லை காரணம் எனது தாய் சகோதரிகளை யாரும் பொறுப்பேற்க வில்லை நான் ஒருவன் படிக்க போவதால் எனது குடும்பமே பலரிடம் அடிமையாகி விடும் கையேந்த வேண்டி வரும். நான் எனக்காக கடவுளிடம்வேண்டிக்கொண்டது எந்தவொரு காலத்திலும் கஸ்ரம் என்று எனது உறவுகளிடம் கடன் கேட்டு போகவைத்து விடாதே என்று அதுபோலவே கடவுளும் என்னை கைவிடவில்லை இன்னும் எனது சகோதரசகோதரிகளுக்கு கொடுத்து உதவி செய்துவருகிறேன் அந்தளவிற்கு இறைவன் என்னை வைத்திருக்கிறான். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் 13-70 வரை இவ்வளவு ஆண்டும் இந்த உலகில் தான் உருண்டு கொண்டு இருக்கிறேன் இந்த வாழ்வவை தந்த இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.

வாழ்க்கையில் முன்னேற எவற்றை கடைபிடிக்க வேண்டும்?
வெறும் புத்தகப்பூச்சியாக இல்லாமல் பலருடனும் பழகி பரந்துபட்ட அறிவைப்பெறவேண்டும். எதைச்செய்தாலும் அளவுடன் அவாவுடனும் செய்ய வேண்டும். தனது தாய் சகோதரம் குடும்பத்தில் பற்றுள்ளவனாக இருக்க வேண்டும். சிக்கன சீவியம் வேண்டும் சிக்கன சீவியம் என்றால் கஞ்சத்தனம் என்பது பொருள் அல்ல வீண்விரையங்களை தடுத்தல் தேவையானவற்றை தேவையானநேரத்தில் பயன்படுத்தல் அவசியம் தேவைப்படின் பூர்த்தி செய்தல் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்.

உங்கள் வாழ்வின் சிறப்பான வழியில் செல்ல சிறப்பாக அறிவுரை வழங்கியவர்கள் பற்றி
நான் முதல் கச்சேரியில் வேலை செய்யும் போது எனக்கு பொறுப்பாக இருந்தவர் அரியரெட்ணம் ஐயா அவர்கள் முதல் மாத சம்பளம் நான் எடுத்ததும் அவர் என்னிடம் சொன்னது சம்பளம் கிடைக்க முதல் வீட்டில் இருந்து தானே பணம் பெற்று செலவு செய்தாய் ஒரு மாதத்திற்கு எவ்வளவு பணம் தேவை என்று தெரியும் தானே அதை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை அம்மாவுக்கு அனுப்பிவிடு எந்தவொரு காலத்திலும் கொப்பி கணக்கு வைத்து கடையில் சாப்பிடாதே பொருட்களை வாங்காதே கையில்இருக்கிற பணத்தினை கொடுத்தே பெறு கையில் இருக்கிறதுதான் வாழ்க்கை என்றார்.அருமையான தத்துவம் பின்பு தான் புரிந்து கொண்டேன். இது அப்போதை விலை

5சதம்-ஒரு பிளேன்ரி
5சதம் ஒரு வடை
5சதம இடியப்பம்
25 சதம் காலையுணவு
75 சதம் மதிய உணவு
25 சதம் இரவு உணவு
அந்த நாள் இனி வருமா----?
1978ல் கலியாணம் செய்ததில் இருந்து இன்று வரை எந்தக் கடையிலும் கொப்பிக்கணக்கு வைத்ததில்லை எனது கொள்கையில் இதுவும் ஒன்று.
திருமணம் முடித்த பின்பு
சோமசுந்தரம் ஐயா அவர்களின் ஆலோசனை கலியாணம் முடித்ததம் யாழ்ப்பாணத்தவர்கள் ஒருவருடத்திற்கு தேவையான சாப்பாடு உடுபுடவை அனைத்துமேகொடுப்பார்கள் ஏன் தெரியுமா---? என்று கேட்டார் நான் அது சம்பிரதாயம் என்றேன் சம்பிரதாயம் என்பதை விட அதில் வாழ்க்கை தத்துவம் உள்ளது கலியாணம் முடித்து குடித்தனம் தொடங்கும்போது தேநீர் வைக்ககூட பானை இராது அந்த ஒரு வருடத்திற்குள் தங்கள் வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் பண்டங்களை சேர்க்கவேண்டும் அது போலவே முதலாவது பிள்ளைக்கு செலவு செய்ய தாய்தகப்பனிடம் இருப்பு இராது அதையும்பெற்றோர்களே பொறுப்பேற்றுக் கொள்வர் இந்தக்காலப்பகுதில் புதுத்தம்பதியர் எல்லாவற்ரையும் புத்திசாலித்தனமாக சேர்த்துக் கொள்வார்கள் முன்னேறுவார்கள் பலர் அம்மா அப்பபா பணத்தினை வீண்விரையம் செய்து அடிமட்டநிலையிலேயே உள்ளனர். திருமணம் செய்து முதலாவது பிள்ளை பாடசாலை போகுமுன் நீ பிடிப்பது தான் மிச்சம் அதன் பின்பு நீ எதையும் மிச்சம் பிடிக்கவே முடியாது அவரின் அறிவுரையை கேட்டு எனது அத்திவாரத்தில் வாழ்க்கையை அமைத்ததினால்

B-COM - முதலாவது மகன்
AERO INGINEJAR & MASTER DEGIRRE-இரண்டாவது மகன் -இருவருமே லண்டனில் வசிக்கின்றனர்
மகள் திருமணமாகிவிட்டாள்
குருவும் வாழ்வும் தலையெழுத்து என்பார்கள் இரண்டுமே என்னுடைய வாழ்வில் நல்லதாகவே அமைந்தது எனது அதிஸ்ரமே.
உங்கள் தாயிடம் கற்றுக்கொண்டவை பெற்றுக்கொண்டவை பற்றி
ஏராளம் ஏராளம் ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே பின் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே’ என்ற பாடல் வரிக்கேற்ப ஒவ்வொரு தாயின் கையில் தான் உள்ளது அவ்வாறே எனது தாயினை அறிவுரைகளின் ஆசான் எல்லாவற்றிலும் சிறந்தவள் அன்னை தான் அந்தத் தெய்வம் இப்போது என்னோடு இல்லை எப்பவுமே என்னால் மறக்க முடியாத என்னுயிர் மேரிமாக்கிரட் அம்மா செல்லமாக எல்லோரும் லில்லி என அழைப்பார்கள் 72 வயதில் எனது தாயார் என்னை துயரில் தள்ளிச்சென்றுவிட்டார்; (கண்கலங்கியவாறு மௌனம் சில நிடங்கள்---) நான் சிறு வயதில் சரியான துடியாட்டம் குழப்படி அதுபோலவே கல்யாணமும் ஆகிஇரண்டு பிள்ளைகள்ஆனபின்பும் குடியும் கும்மாளம்தான் ஒரு நாள் கொஞ்சம் கூடிற்று முஸ்பாத்தியா இருந்திற்றன் என்ன நடந்தது. என்றே தெரியல்ல காலையில் கண்விழிக்கிறேன் தேநீர் கோப்பையோடு எனக்கு முன்னால் எதுவுமே பேசாமல் இதைக் குடி என்றார். குடித்த பின்பு உன்னுடைய போக்கு சரியில்லை இரண்டு பிள்ளைக்கு தகப்பன் என்றால் போல எனக்கு நீ பிள்ளை இல்லை என்றாடா நீ இப்படி நடக்கிறா வெளுத்துப்போடுவன்டா கவனாமாய் இருடா---

அதுபோல “மோருக்கு போற உனக்கு முட்டி புறகால தேவையில்லை”உனக்கு என்ன தேவையோ அதை நேர்மையாக செய். ‘அரிச்சந்திரன் ஒரு பொய் சொல்லக்கூடாது என்பதற்காகத்தான் கானகம் காத்தான்’ பொய் என்பதே உனது வாழ்க்கையில் வேணாமடா. உன்னிடம் நேர்மை இருந்தால் பயப்பட தேவையில்லை தைரியமாக பேசு எதற்கும் அஞ்சாதே சத்தியத்திற்காய் போராடு. உண்மை உழைப்பு நேர்மை விசுவாசம் இம்மூன்றையும் வாழ்வாக்கிக்கொள் வாழ்வாக்கிகொள் உன்வாழ்வு சிறப்பாய் அமையும் என்றார் பல தவறுகள் செய்திருந்தாலும் களவும் கற்று மற என்பது போல எனது அன்னையின் வளர்ப்பில் நல்ல மனிதனாகவே எனது வாழ்வை கொண்டு செல்கிறேன்.
1980 தொடங்கி 2015 வரை உங்களுடைய கைத்தொழில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி
உலகத்தில் மாற்றம் ஏற்படும் போது நாமும் அதற்கு ஏற்றால் போல் மாறித்தான் ஆகவேண்டும் மனிதன் வெற்றி தோல்விகளைக் கண்டு துவண்டு விடக்கூடாது வெற்றிக்கானவழியை தேடவேண்டும் நன்கு சிந்திக்க வேண்டும் தோல்விக்கான காரணத்தை கண்டு பிடிக்க வேண்டும். மனம் சோர்ந்து தளர்ந்து போய்விடக்கூடாது நான் எனது தோல்விக்கான காரணத்தை திரும்பத்திரும்ப ஆராய்வேன் அது தொழில் என்றாலும் சரி வாழ்வானாலும் சரி ஆராச்சியும் தேடலும் தொடர வேண்டும் வெற்றி நம்மைத் தொடரும்.

மெழுகுதிரி உற்பத்தியும் மூலப்பொருள் கொள்வனவும் சந்தைப்படுத்தல் போன்றவற்றில் ஏற்பட்ட சவால்கள் பற்றி
தொழிலுக்கு முரண்பாடும் எதிர்ப்பும் ஏற்படுவது வழமையே எதிர்ப்பு எனக்கும் ஏனையவர்களுக்கும் இல்லை எனக்கு உரியதை கடவுள் எனக்கு தருவார் “எந்தக்கோளால் அளக்கிறாயோ உனக்கும் அந்தக்கோளால் அளக்கப்படும”; இங்கு சந்தைப்படுத்தலும் இல்லை ஊக்குவிப்பும் ஏற்றுக்கொள்ளளும் மனமும் இல்லை என்னுடைய கொள்கை வாழ்க்கையில் நேர்மை இருக்கவேண்டு;ம் நான் ஒரு கிறிஸ்த்தவன் கடவுள் விசுவாசம் கொண்டவன் 1984ஆண்டில் தான் இக்கைத்தொழிலை ஆரம்பித்தேன்;. அவ்வேளையில் ‘பெற்றன் கடைமுதலாளி’ கற்பூரம் செய்யச்சொல்லி கேட்டார்கள் மெழுகுதிரிஉற்பத்திக்கு தேவைப்படும் மூலப்பொருள்தான் கற்பூரத்திற்கும். மெழுகும்-விளைவுகற்பூரமும் தான் நான் கடைசிவரை சம்மதிக்கவில்லை காரணம் ஏன் என்றால் கற்பூரம் இந்துசமயத்தில் கோவில்களில் பாவிக்கின்ற புனிதமானபொருள் இந்து சமயமுறைப்படி ‘மச்சம் மாமிசம் தவிர்ப்பு’ விதிவிலக்கு நான் வீட்டில் மச்சம் மாமிசம் உண்பவன் ஆனபடியால் செய்யமாட்டேன் என்றேன். என்னுடைய மனட்சாட்சிக்கு விரோதமக எதையும் செய்ய மாட்டேன்.

மெழுகின் தன்மை அதன் சிறப்பு பற்றி
மெழுகு பல வகைகளில் பலவாறான தேவைகளுக்கு பயன் படுகின்றதொரு அற்புதப்பொருள் மக்கு மெழுகு-மரமெழுகு என பலவர்க்கங்கள் உள்ளது பல முக்கிய விடையங்களுக்கு பாவிக்கப்படுகின்றது. விஞ்ஞானம்-மெஞ்ஞானம் இரண்டிலும் பாவிக்கப்படும் சிறப்பான பொருள். “பரவின்”என்பது எரிதலுக்கு முக்கியகாரணமுடைய பெற்றோலிய எரிபொருள் (பவுடர்-தூள்)லிக்குயிட்டாகவும் வரும் வைத்தியசாலையிலும் பாவிக்கப்படகின்றது. மெழுகுதிரியை கொழுத்தியதும் கொழுப்பு உருக மெழுகில் உள்ள “பரவின்”திரியில் உறிஞ்சப்பட்டு எரிகின்றது. ஒன்று இரண்டு தடைவ கொழுத்தினாலும் உடனே நூர்ந்து விடுவது அந்த மெழுகுதிரியில் “பரவின்”இல்லாமையே… கோயில்களில் சேருகின்றவை ஏனைய கழிவு மெழுகுகளை கெமிக்கல் ஊற்றி வடிகட்டி பின்பு “பரவின்” கலந்துதான் உற்பத்தி செய்வோம்.இந்தத்தொழில் தொடங்கும் போது என்னுடைய ஒன்றுவிட்ட அருட்சகோதரன் சொன்னது தரமாய் இருக்கவேண்டும் பொருளின் தரம் குறையக்கூடாது மனத்திருப்தி இருக்கவேண்டும்.

சுயதொழில் முயற்சியாளர் வாழ்க்கை அனுபவம்பெற்ற பெரியவர்என்ற வகையில் தங்கள்அனுபவத்தில் தற்கால இளைஞர் யுவதிகளுக்கான ஆலோசனை
எந்தத் தொழிலாகட்டும் எந்தத் துறையாகட்டும் ஆர்வமும் விருப்பமும் அத்தொழில் பற்றிய போதி அறிவு முதலில் இருக்கவேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்பது போல நம்மை அர்பணித்தலும் கடவுள் நம்பிக்கையும் வேண்டும். தொழில் என்றால் எப்போதுமே லாபம்தான் என்றில்லை நட்டம் பிரச்சினைகள வீழ்ச்சி; என்பனவற்றை அலசி ஆராய்ந்து தீர்வைக் காணவேண்டும். ஒரு உதாரணமாக-முந்திய காலத்தில் யாழ்ப்பாணத்தில் அண்ணா கோப்பியை உரலில் குத்தி பொலித்தீன் பையில் அடைத்து தான் விற்றார்கள் ஆரம்பம் அதன்பின்பு விலைப்படாத நாளில் வேலையாற்கள் சும்மா இருக்கினம் என்ற காரணத்தில் பற்பொடி செய்தார்கள் சிறுகசிறுக ஆரம்பித்து இன்று இலங்கையில் பெயர் சொல்லுகின்ற அளவிற்கு உயர்ந்துள்ளார்கள் என்றால் அது அவர்களின் விடாமுயற்சியும் தொடர்ச்சியான உழைப்பும் தொழிலில் இருந்த விருப்பமும்தான் நாமும் ஜெயிக்கலாம் நம்பிக்கையோடு முயன்றால்.

தொழில் செய்பவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கவேண்டும்
தொழில் செய்கின்றவன் முதலில் நேர்மையாக இருக்க வேண்டும. அடுத்தவனை விழுத்தி முன்னுக்கு வரவேண்டும் என்று நினைக்ககூடாது. அவனது முயற்சி அவனது நம்பிக்கை அவனை உயர்த்தும் எந்தவிடையத்திலும் போட்டி இருக்கலாம் பொறாமை இருக்கவே கூடாது. இங்கு எல்லாமே உள்ளது எனது உற்பத்தியை எமது மாவட்டத்தில் உள்ள கடைகளே முன்வந்து வாங்கு வதில்லை உதாசினம் செய்கின்றார்கள் திடிரென மின்சாரம் தடைப்பட்ட நேரங்களில் எல்லாம் மக்கள் கஸ்ரப்பட்டு விடுவார்கள் என்கிற காரணத்தினால் தான் அந்த நேரங்களில் எல்லோருக்கும் சப்பிளை செய்தேன். வியாபாரத்தில் பல பாடங்களை கற்றுள்ளேன். நீண்டகாலத்திற்கு பிறகுதான் ஞானம் பிறந்துள்ளது உற்பத்தி தாராளமாக இருக்கும் போதுதான் அதிகமானகடைகள் வியாபாரிகள் தேவை சமான் தட்டுபாடு நிலவும் நேரங்களில் ஒரு கடைக்கு கொடுத்தாலும் பத்து கடைக்கு கொடுக்கின்ற உற்பத்தி தேவைப்படும் அப்போது எனது உற்பத்திகளை தொடர்ச்சியாக கொள்வனவு செய்பவர்களைத்தான் கணக்கில் எடுப்பேன். மன்னாரில் திடிரென மின்சாரம் தடைப்பட்டாலோ அல்லது ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டாலோ மன்னார் மாவட்டம் பூராகவுள்ள மக்களுக்கு எனது உற்பத்திப் பொருளான மெழுகுதிரியை வழங்குவேன் மக்கள் வெளிச்சத்தில் தான் இருப்பார்கள் இருள் எம்மக்களை நெருங்காது இதை நான் சவாலாகவே ஏற்றுக்கொண்டுள்ளேன் என் பணி தொடரும்..

உங்களால் வேறுயாருக்காவது தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததுண்டா---?
தொழில் வாய்ப்பு என்பதை விட ஒரு சிறிய சந்தர்பம் எனக்கு அமைந்தது. இக்கொடிய யுத்தத்தால் உடமைகளை இழந்து இடம்பெயர்ந்து வந்து எனது வீட்டிற்கு அருகில் இருந்த சிறிய குடும்பத்திற்கு எனது உற்பத்தியின் சிறுபகுதியை செய்யக் கொடுத்தேன். அப்போது எனக்கு நல்ல வியாபாரம் நடந்ததாலும் அவர்களின் வாழ்க்கைசீவியத்தை இத்தொழிலின் மூலம் ஈடுகட்டமுடிந்ததாலும் அவ்வாறான உதவியை என்னால் செய்ய முடிந்தது. இன்றுவரை என்னால் முடிந்தவரை துன்பப்படகின்ற வர்களுக்கும் படிக்கக்கூடிய மாணவ மாணவிகளுக்கு உதவி செய்து வருகின்றேன் நானும் துன்பத்தில் வாழ்ந்தவன் என்பதால் எனக்கும் துன்பம் என்றால் என்னவென்று தெரியும்.
உங்கள் வாழ்வில் மறக்க முடியாதவர் என்றால் அது- அருமையான கேள்வி என் வாழ்வை மாற்றியவர் என்றும் துணை நிற்பவர் சிறந்த கல்விமான் அருட்தந்தை எல்-ஏ-சிங்கராஐர் அவர்கள் தான் அவரை எனது பதினான்காவது வயதில் முதலில் சந்தித்தேன். கல்வி கற்குமாறு பல அறிவுரைகளை வழங்கினார் நான்தான் அதை ஏற்கவில்லை உன்னோடு இனி பேசிப்பலனில்லை நீர் போகலம் என்றார் பின்பு எனது 22வது வயதில் தான் நான் மீண்டும் அவரை சந்தித்தேன் அந்நாளை என்வாழ்நாளில் மறக்கவே முடியாது அன்று தை மாதம் முதலாம் திகதி வருடப்பூசை முடிந்து போறன் கோயில் முகப்பில் நிற்கிறார் அவர் முன்னால் முழங்காலில் இருக்கிறேன் என்னை ஆசீர்வதிக்குமாறு அவர் எனக்கு ஆசீர்வாதம் போடாமல் முகட்;டை பார்த்துக் கொண்டு நிற்கிறார். அவருக்கு என் மீது இருந்த கோபம் இன்னும் போகவில்லை ஏன் எனில் அவரின் ஆலோசனையை நான் கேற்கவில்லைத் தானே சிறிது நேரத்தின் பின் “என் நெற்றியில் கையை வைத்து நல்லாய் இருக்க வேண்டிய நீ பிசாசே கெட்டுப்போனாய் ஆனாலும் கடவுள் உன்னைக் கைவிடமாட்டார் என்றார்” எனக்கு மிகவும் கவலையாய் இருந்தது வருடப்பிறப்பில் அதுவும் அருட்தந்தை இவ்வாறா ஆசீர்வதிப்பது மனமுடைந்தவனாய் எனது தாயிடம் சொன்னேன். எனது தாய் எதையும் முழுமையாக சிந்திக்க வேண்டும் என்றார் அவர் சொன்னதில் என்ன தவறு முன்வரிகளை விடு பின் வரிகளில் “கடவுள் உன்னை கைவிடமாட்டார்” என்றுதானே வருகிறது நானும் சொல்கிறேன் நீ நல்லாக இருப்பாய். அவருடைய ஆசீர்வாதம் என்னுடைய தாயின் ஆசீர்வாதமும் என்னோடு இருக்கும் வரை என்னை யாராலும் உச்ச முடியாது.
தற்போது பல அமைப்புகள் சிறுகைத்தொழில் பயிற்சிகளை நடாத்துகின்றது குறிப்பாக மெழுகுதிரி-சாம்பிராணி ஊதுபத்தி உற்பத்திகள் கைவினைப் பொருட்கள் இப்பயிற்சிகளில் பலன் உண்டா---
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றுவலுவுள்ளோர் என புனர்வாழ்வும் தொழில் பயிற்சியும் என்ற தொடர்பாக பயிற்சிகளை வழங்குகின்ற பல அமைப்புகள் பயிற்சி வழங்கி வெறுமனே தேவையான உபகரணங்களையும் கொடுக்கின்றது. நல்ல விடயம் ஆனால் மூலதனம் -சந்தைப்படுத்தல் முறை அமைவிடம் பின்புலம் போன்ற விடையங்களை கற்றுக்கொடுப்பதில்லை எவ்வளவு தேவை என்னமாதிரி விற்பனை செய்ய வேண்டும் தேவை கருதி பொருட்களின் தரம் தராதரம் உற்பத்தித்திறன் போன்றவற்றில் போதிய அறிவை வழங்கவும் செயற்படுத்தவும் தெளிவுபடுத்துவது அவசியமானதொரு விடையமே ஆகும்.

வாழ்வின் எழுச்சிக்கு உங்கள் வாழ்வில் இருந்து எமக்கு
வாழ்வின் எழுச்சிக்கு நான் கடைப்பிடித்தது முதலில் கடவுளை நம்ப வேண்டும் என்னதான் பிரச்சினை சிக்கல் துன்பம் என்றாலும் தன்னுடைய வயதில் பார்க்க மூத்தவனாகவும் தன்னிலும் பார்க்க சிறந்த புத்திசாலியாக இருக்க வேண்டும் அவரிடம் நடந்த பிரச்சினையை தெளிவாக சொல்லி முழுமையான தீர்வைக்காணலாம் ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்தால் நல்ல தீர்வு முடிவு கிடைக்கும் மூத்தவர்களின் ஆலோசனை கட்டாயம் நமக்கு வேண்டும். தற்போதைய பிள்ளைகள் பெற்றோரின் சொல் கேட்பதும் இல்லை மதிப்பதுமில்லை--- என்னுடைய பிள்ளைகளே சில சமயத்தில் நான் சொல்வதைக்கேட்பதில்லை எல்லாமே கலியுகமாகிப்போய்விட்டது. எல்லாம் அவன் செயல்

ஆறாவது ஆண்டில் கால்பதித்து இருக்கும் மன்னார் மக்களின் இதயத்துடிப்பான நீயுமன்னார் இணையத்தின் சேவைகள் பற்றி
உண்மையில் உங்களின் சேவை அளப்பரியது ஏன் என்றால் 30 வருடங்களாக சுயதெழில் முயற்சியாளனாக இருக்கும் என்னை யாரும் கண்டு கொள்ள வில்லை நான் விரும்பவும் இல்லை ஆனால் இந்த மன்னாருக்கு மட்டுமே தெரிந்த என்னை இணையத்தின் மூலம் இவ்வுலகம் அறிய வைத்த என்னைப்படைத்த கடவுள்களாகிய பெற்றோருக்கு முதற் கண் நன்றி இணையத்தின் மூலம் என்னை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் உங்கள் பாரிய முயற்சியானது. எம்மைப்போன்றவர்களின் உழைப்பிற்கு கொடுக்கின்ற உயரிய கொளரவமாகவே நான் கருதுகிறேன்.தொடர்க உங்களது சேவை இன்னும் பல நூறு ஆண்டுகள் எம்மைப்போன்றவர்களுக்கு தேவை.

நீயு மன்னார் இணையத்திற்காக
சுயதொழில் முயற்சியாளர்கள் தேடலில் சுடர் வீசுபவர்------------------------------------
“மன்னார் மின்சாரம் இன்றிப்போகும் சந்தர்ப்பத்தில் எனது மெழுகுதிரியின் உற்பத்தியால் ஒளியூட்டுவேன்”

Reviewed by NEWMANNAR
on
January 18, 2015
Rating:
No comments:
Post a Comment