அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.-Photos



மன்னார் மாவட்டத்தில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த 27 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை(29) மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.

மன்னாரில் 'மெற்ரோ பொலிட்டன்' கல்லூரியினால் நடாத்தப்பட்ட தொழில் வாய்ப்பு உயர் கல்வி வழிகாட்டியான குறித்த ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கே குறித்த சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் ஆகியவை வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை மற்றும் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமேல்,மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் மற்றும் அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது குறித்த ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த 27 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு தெரிவு செய்யப்பட்ட 3 மாணவர்களுக்கு பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அதே வேளை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






















மன்னார் மாவட்டத்தில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு.-Photos Reviewed by NEWMANNAR on January 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.