மைத்திரி அரசுடன் நல்லுறவைப் பேண புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஆர்வம்!
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நல்லுறவைப் பேண புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. ஆக்கபூர்மான வழிகளிலும், நம்பகத் தன்மையுடனும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புலம்பெயர் சமூகத்துடன் உறவுகளைக் கட்டியெழுப்ப வேண்டுமென குளோபல் தமிழ் போரம் அமைப்பு கோரியுள்ளது. முன்னைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை சிறுபான்மை மக்கள் நிராகரித்துள்ளதாகவும் தேர்தல் முடிவுகளின் மூலம் இந்த விடயம் தெளிவாக புலப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

தெற்கில் மைத்திரிபால சிறிசேனவிற்கு மக்கள் ஆதரவளித்த போதிலும் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது. சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக குளோபல் தமிழ் போராம் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல் சட்ட மீறல்கள் தொடர்பில் நியாயம் கிட்டுவதற்கு சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து தமது அமைப்பு செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழ் மக்கள் தேர்தல்களின் போது மிகவும் புத்தி சாதூரியமாக தங்களது விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்த வல்லவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் மைத்திரிபாலவிற்கான தமிழ் மக்களின் ஆதரவு என்பதனை விடவும், மஹிந்த ராஜபக்ஸ மீதான தமிழ் மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி நிற்கின்றது. சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென தமிழ் மக்கள் விரும்புவதாகவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மைத்திரி அரசுடன் நல்லுறவைப் பேண புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஆர்வம்!
Reviewed by NEWMANNAR
on
January 12, 2015
Rating:
No comments:
Post a Comment