அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பல முறைகேடுகளை மேற்கொண்ட அமைச்சருக்கு எதிராக புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-இ.குமரேஸ்.

கடந்த ஆட்சியில் முறைகேடான நியமனங்கள்,அபிவிருத்தி என்ற போர்வையில் மோசடிகள் என்பன அமைச்சர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

எனினும் புதிய அரசில் அதே அமைச்சர் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.குறித்த முறைகேடான நடவடிக்கைகள் இனி இடம் பெற சந்தர்ப்பம் வழங்கக்கூடது என மக்கள் தெரிவித்துள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் இ.குமரேஸ் தெரிவித்தார்.

நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கச் சென்ற போதே மக்கள் அவ்வாறு தெரிவித்ததாக நகர சபை உறுப்பினர் இ.குமரேஸ் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

அமைச்சர் ஒருவரே கடந்த காலங்களில் அனைத்து அமைச்சுக்களையும் பெற்று ஊழல் மோசடிகள்,சமூர்த்தி நியமனங்கள் என்பவற்றை வழங்கியுள்ளார்.குறித்த அமைச்சர் குரு நில மன்னன் போல் மக்களை வதைத்து அனைத்து அடாவடிகளையும் மேற்கொண்டுள்ளார்.

-எனவே புதிய அரசில் அவரின் அடாவடிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மன்னார் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.குறிப்பாக இத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக முழு மனதுடன் ஒட்டு மொத்தமாக தீர்மானத்துடன் இருந்தார்கள்.ஆனால் கடந்த ஆட்சியில் இம் மாவட்ட மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கு காரணமாக இருந்தவர்கள் இந்த ஆட்சிப்பக்கம் மாறியது 75 வீதத்திற்கு மேற்பட்ட  மக்கள் மீண்டும் மஹிந்த அரசை ஆதரிக்க முற்பட்டார்கள்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் விடா முயற்சியும்,மக்களுக்கான தெழிவூட்டலுமே 45543 வாக்குகளை மக்களிடம் இருந்து பெற்று வெற்றிக்கான காரணமாக இருந்தது என்பது உண்மை.
கடந்த கால அடாவடிகளுக்கும் முறைகேடுகளுக்கும் காரணமாக இருந்தவர்களுக்கு இன்று புதிய அரசுடன் இணைந்தமைக்கு எதிராகவே தமிழ் மக்கள் 5824 வாக்குகளை மஹிந்தவிற்கு வழங்கியுள்ளனர் என்பதும் உண்மை.

-சில சம்பவங்களை உதாரணமாக கூறுவதாக இருந்தால் தனியார் காணிகள் அபகரிப்புக்கு காரணமாக இருந்துள்ளனர்.வேலை தருகின்றோம்,வீடு தருகின்றோம் என கூறி அரசியல் கூட்டங்களுக்கு மக்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
-குளங்கள் புனரமைப்பு செய்வதாக கூறி பல கோடி ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

-இன்று அந்த இடங்களில் குளங்கள் இல்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.சமூர்த்தி நியமனத்தில் தகுதி இல்லாதவர்களுக்கு நியமனங்களும்,தமது கட்சியில் இணைத்து கட்டாயச் சந்தா பணமும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
-சமூர்த்தி அலுவலர்களை அரசியலில் இணைத்து சமூர்த்தி நிவாரணங்கள் வழங்குவதிலும்,கட்சி பாகுபாடுகளும் காட்டப்பட்டுள்ளது.

-அபிவிருத்திக்குழு தலைவர் என்ற போர்வையில் நகரில் பல அபிவிருத்திகளை முடக்கியமை,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சபைகளில் உள்ள வேளைகளை செய்ய விடாது தடுத்தமை போன்ற பல விடையங்களை சொல்லிக்கொண்டே போக முடியும்.
-மக்கள் நல்லாட்சி என்று எதிர்பார்த்துள்ள இவ் ஆட்சியில் -கடந்த கால முறைகேடுகள் அனைத்தும் ஆராயப்பட்டு மீள் பரிசீலினைக்கு உற்படுத்தப்பட்டு அநீதி இளைக்கப்பட்டவர்களுக்கு நீதி நியாயம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

இதற்கு புதிய அரசு நடவடிக்கைகளை வேண்டும் என்பதோடு முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இதனால் மக்களின் மன அழுத்தங்களை குறைத்து புதிய அரசில் மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.புதிய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.என அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னாரில் பல முறைகேடுகளை மேற்கொண்ட அமைச்சருக்கு எதிராக புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-இ.குமரேஸ். Reviewed by Admin on January 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.