சிறுவர்களின் பிரச்சினைகளை முறையிட புதிய தொலைபேசி பிரிவு!
சிறுவர்களின் மன ரீதியான உளைச்சல்கள் தொடர்பில் சிறுவர்களாலேயே முறையிடக் கூடிய சிறுவர் நட்பு தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தவதற்கு சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சிறுவர்களுக்கு ஏற்படும் மன காயங்கள், மன அழுத்தங்கள், மன ரீதியான உளைச்சல்கள் உள்ளிட்ட பிரச்சினைனளை குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்கலாம்.
சிறுவர்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகள், பல்வேறு தொல்லைகள், தொடர்பில் இதுவரை 1929 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு முறையிடப்பட்டது.
குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு மேலதிகமாகவே இப் புதிய தொலைபேசி பிரிவு அறிமுக்கப்படுத்தப்படவுள்ளதாக சிறுவர் விவகார பிரிவு அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் சிறார்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய, சிறுவர் மன நிலையை புரிந்து கொண்ட அதிகாரிகளுடன் இம் முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்.
மேலும் சிறுவர் விவகார அமைச்சர் ரோசி சேனாநாயக்கவின் ஆலோசனையின் பிரகாரம் இப்புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தவும், இதற்காக தனியான பிரிவொன்றை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிறுவர்களின் பிரச்சினைகளை முறையிட புதிய தொலைபேசி பிரிவு!
Reviewed by NEWMANNAR
on
February 07, 2015
Rating:

No comments:
Post a Comment