அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாந்தை மேற்கு விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.- Photos



தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எம்.பியின் 2014ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட பாதீட்டு நிதியிலிருந்து, மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகள் என்பன நேற்று சனிக்கிழமை(7) வழங்கி வைக்கப்பட்டது.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன்பிட்டி சென்சேவியர் விளையாட்டு கழகத்துக்கு விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் ஐக்கிய விளையாட்டுக்கழகம்,காத்தான் குளம் புனித சூசையப்பர் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றிற்கும் விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் ஆகியவை வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் எஸ்.வரப்பிரகாசம், மன்னார் நகரசபை உறுப்பினர் ரட்ணசிங்கம் குமரேஸ், மன்னார் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பர்சூக், மாந்தை மேற்கு விளையாட்டு உத்தியோகத்தர் அஸார் யுனைட், மற்றும்கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.









மன்னார் மாந்தை மேற்கு விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.- Photos Reviewed by NEWMANNAR on February 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.