அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் துறை புகையிரத நிலைய பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை.-Photos

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் (14) சனிக்கிழமை தலைமன்னார் பியர் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் தலைமன்னார் பகுதில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஏதிர்வரும் சனிக்கிழமை தலைமன்னார் பியர் பகுதிக்கு வருகை தரும் -இந்திய பிரதமர் நரேந்திர மோடி காலை 11 மணியளவில் தலைமன்னார் துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்புக்கான புகையிரத சேவையினை ஆரம்பித்து வைப்பார்.

-இந்த நிலையில் இந்திய பிரதமரின் வருகையை முன்னிட்டு பொலிஸரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தலைமன்னார் துறை புகையிரத நிலையம் சுற்றிய பகுதிகளின் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

-மன்னார் மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸார் இன்று (12) வியாழக்கிழமை மாலை விசேட கடமைக்காக தலைமன்னார் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.





தலைமன்னார் துறை புகையிரத நிலைய பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை.-Photos Reviewed by NEWMANNAR on March 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.