அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணம் பளை ஏ 9 வீதியில் பாரிய விபத்து - Photos


யாழ்ப்பாணம் பளை ஏ 9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று புதன்கிழமை அதிகாலை நெல்லியடிப் பகுதியில் இருந்து தென்னிலங்கைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியின் முன்பக்க ரயர் வெடித்து மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

லொறி முற்றாகச் சிதைந்து சின்னாபின்னமானது. லொறிச் சாரதியான புத்தூர் வடக்கைச் சேர்ந்த 55 வயதுடைய குகதாசன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். ஆவரங்காலைச் சேர்ந்த ராமலிங்கம் தர்மலிங்கம் என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

கரணவாய் வடக்கு, கரவெட்டியைச் சேர்ந்த தெ.ரெங்கநாதன் என்பவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இவரது சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









யாழ்ப்பாணம் பளை ஏ 9 வீதியில் பாரிய விபத்து - Photos Reviewed by NEWMANNAR on March 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.