மன்னார் இ.போ.ச ஊழியர்கட்கான மனித உரிமைக்கருத்தரங்கு
(16-03-2015)அ ன்று மன்னார் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கட்கான சட்ட அறிவுக்கருத்தரங்கு ஒன்று மன்னார் இ.போ.ச சபைக்காரியாலயத்தில் ஒழுங்கமைத்து நடாத்தப்பட்டது. இதற்கான ஒழுங்கமைப்புக்களை இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவும் இணைந்து நடாத்தியிருந்தன. அண்மைக்காலமாக இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகளில் வெளிப்படையான மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வந்துள்ளன என்ற பொதுமக்களின் முறைப்பாட்டை அடுத்தே இவ்வாணைக்குழுக்கள் இக்கருத்தரங்கை ஒழுங்கமைத்திருந்தன.
இக்கருத்தரங்கில் சாரதிகள் மற்றும் நடத்துணர்கட்கு மனித உரிமைகள்இ அடிப்படை உரிமைகள் மற்றும் பாலியல் ரீதியிலான உரிமை மீறல்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டதுடன் அது தொடர்பான சட்டரீதியான தண்டனைகள் மற்றும் பின்விளைவுகள் பற்றியும் பங்குபற்றுணர்கள் அறியவும் வாய்ப்பளிக்கப்ட்டது. இக்கருத்தரங்கில் சட்ட உதவி ஆணைக்குழு சார்பாக திரு.அர்ஜின் மற்றும் திரு.தினேஸ்குமார் ஆகியோரும் மனித உரிமை ஆணைக்குழு சார்பில் திரு.வசந்தராஜ் மற்றும் திரு.தீசன் ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
மன்னார் இ.போ.ச ஊழியர்கட்கான மனித உரிமைக்கருத்தரங்கு
Reviewed by NEWMANNAR
on
March 17, 2015
Rating:
No comments:
Post a Comment