மன்னாரில் பள்ளிமுனையில் காணாமல் போன இளைஞன் வெளிக்கடைச் சிறைச்சாலையில்-மீட்டுத்தரக் கோரி தாய் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்.
இனந்தெரியாத நபர்களினால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன் அழைத்து செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயிருந்த மன்னார் பள்ளிமுனைப் பகுதியை சேர்ந்த தனது மகனின் புகைப்படம் இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளது என தெரிவித்து குறித்த இளைஞனின் தாயார் தனது மகனை மீட்டுத்தருமாறு கோரி இன்று திங்கட்கிழமை (16) மன்னார் நீதிமன்றத்தில் சட்டத்தரணியுhடாக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
சம்பவ தினமான கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர்; மாதம் 11 ஆம் திகதி(11-09-2008) அன்று மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த அன்ரன் சனிஸ்ரன் பிகிராடோ (வயது-24) என்பவர் தனது உறவினர் வீட்டில் இருந்த போது இனம் தெரியாத நபர்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஆழைத்துச் செல்லப்பட்ட குறித்த இளைஞன் வீடு திரும்பாத நிலையில் குறித்த இளைஞனின் தாயார் பொலிஸ் நிலையம் உற்;பட பல இடங்களிலும் மகன் காணாமல் போனமை குறித்து முறைப்பாடு செய்திருந்தார்.
சுமார் 7 வருடங்களை கடந்தும் குறித்த இந்த நிலை குறித்து எதுவும் தெரியவில்லை.இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி (14-01-2015) தைப்பொங்கல் தினமன்று வெலிக்கடை சிறைச்சாலையில் இடம் பெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் காணாமல்
போன குறித்த இளைஞனும் கலந்துகொண்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
குறித்த புகைப்படத்தை பார்த்த தாயார் குறித்த புகைப்படத்தில் உள்ளது கடந்த 7 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது மகன் அன்ரன் சனிஸ்ரன் பிகிராடோ என அடையாளம் கண்டு கொண்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த தாய் இன்று திங்கட்கிழமை(16)சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரெட்ணவேல் ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மன்னார் நீதிவான் அலெக்ஸராஜா ஆசீர்வாதம் கிறேசியன், விசாரணையை மேற் கொண்டார்.
இதன் போது காணாமல் போன குறித்த இளைஞன் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அவர் ஏன்? எதற்காக கைதுசெய்யப்பட்டார். தடுத்து வைக்கப்பட்டுள்ளதன் காரணம் என்ன? என்ற தகவழ்களை பெற்று மன்னார் நீதிமன்றில் சமர்ப்பிக்கும் படி மன்னார் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு விசாரனை மீண்டும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி(27-04-2015) விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
March 17, 2015
Rating:
No comments:
Post a Comment