ஆட்சி மாற்றமே எம் எல்லோiயும் ஒன்று சேர்த்துள்ளது-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி
நாங்கள் அனைவரும் இன்று இந்த மேடையில் ஒன்றாக இருக்கின்றோம் என்றால் அதற்கு காரணம் இந்த ஆட்சி மற்றத்தின் ஒரு பிரதி பலிப்பு என்பதாக நாம் கருதுகின்றோம்.என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மத்திய அரசினால் வன்னி மாவட்;ட அரச போக்குவரத்துச் சாலைகளுக்கு புதிய பேருந்துகள் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை(15) மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் இடம் பெற்றது.இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
கடந்த வருடங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதற்கும் அழைக்கப்படுவதில்லை.அந்த வகையில் தற்போதைய ஆட்சி மாற்றம் இன்று எம் எல்லோரையும் ஒன்றாக இங்கு அமர வைத்திருக்கின்றது என்பதனை நினைத்து நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
மன்னார் மாவட்டத்தைப் பொருத்தவரையில் இரண்டு விடையங்கள் இன்றைக்கு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக இருக்கின்றது.
இந்திய பிரதமர் தலைமன்னார் பகுதிக்கு வந்து புகையிரத சேவையை ஆரம்பித்து வைத்துள்ளதோடு தலைமன்னார்-இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்க அடிக்கல்லினை நாட்டி வைத்துள்ளார்.குறித்த நடவடிக்கைகள் வரலாற்றுச்சிறப்பு மிக்கதாக காணப்படுகின்றது.
அதே போல் போரால் பாதிக்கப்பட்ட எமது வன்னி மாவட்டத்திற்கு இந்த புதிய அரசாங்கம் நூறு நாள் வேளைத்திட்டத்தின் கீழ் புதிய பஸ் வண்டிகளை வழங்கி வைத்துள்ளமையை இரண்டாவது நிகழ்வாக பார்க்க முடிகின்றது.
எனவே நூறு நாள் வேளைத்திட்டத்தின் கீழ் பாஸ்சை கொடுப்பதன் ஊடாக மக்களின் பிரச்சினைகள் தீர்ந்து விடப்போவதில்லை.பல பிரதேசங்களில் வீதிகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.
எனவே போக்குவரத்து அமைச்சரின் ஊடாக குறித்த வீதிகளை புனரமைக்க நடவடிக்கைகள் மோற்கொள்ள வேண்டும்.
வீதிகள் புனரமைக்கப்படுவதன் காரணத்தினால் புதிய பஸ் வண்டிகளை எவ்வித பிரச்சினைகளும் இன்றி சேவையில்; ஈடுபடுத்த முடியும்.
-அது மட்டுமின்றி அரச போக்குவரத்துச் சேவையும்,தனியார் போக்குவரத்துச் சேவையும் இணைந்து செயற்படக்கூடிய ஒரு வழிமுறையை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
குறித்த போக்குவரத்துச் சேவைகளை நல்ல நிலைக்கு கொண்டு செல்வதாக இருந்தால் முதலில் வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும்.
அதை விட எமது வன்னி மாவட்டம் பின் தங்கிய மாவட்டம்.வன்னி மாவட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் முiறாயக காலடி எடுத்து வைத்துள்ளார்.
-வெளிநாட்டு அமைச்சர்கள்,தூதுவர்கள் இலங்கைக்கு வருகை தந்தவுடன் யாழ் நோக்கி செல்லுகின்றனர். ஆனால் இந்திய பிரதமர் இங்கு வருகை தந்தமைக்காக பிரதமருக்கும் இந்திய அரசிற்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
March 16, 2015
Rating:
No comments:
Post a Comment