வட மாகாண போக்குவரத்து தொடர்பில் அரச – தனியார் பேருந்து சங்கங்களிற்கு இடையில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன! டெனிஸ்வரன்
தமிழ் மக்களின் உரிமை தொடர்பில் இந்த அரசு உரிய கவனமெடுத்து தீர்;த்து வைக்குமாயின் எமது நாடு துரித கதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு நிகராக அபிவிருத்தி அடையும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை என வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
மத்திய அரசினால் வடக்கு மாகாண மக்களின் போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் ஓர் அங்கமாக நேற்று சனிக்கிழமை(14) வன்னிமாவட்ட போக்குவரத்துச் சாலைகளுக்கு புதிய பேருந்துகள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,,
மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு வழங்கப்படும் இந்த புதிய பேருந்துகளின் மூலம் போக்குவரத்து சேவை நடைபெறாத பிரதேசங்களிற்கு புதிய சேவைகளை ஆரம்பிப்பதன் மூலமும் கிராமப்புறங்களுக்கான சேவைகளை அதிகரிப்பதன் மூலமும் பயணிகள் எதிர் கொள்ளும் போக்குவரத்து பிரச்சனையை கணிசமாக குறைக்க முடியும்.
இவ்வாறான மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் அதன் சேவைகள் சென்றடைய வேண்டுமென்ற உயரிய நோக்கினை கொண்டுள்ளதை எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.
மேலும் வருகை தந்திருக்கும் போக்கு வரத்து அமைச்சர் அவர்களிடம் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் என்ற வகையில் துறைசார் விடயங்கள் சிலவற்றை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இன்று வட மாகாணத்தில் போக்குவரத்து தொடர்பாக இலங்கை போக்குவரத்து சாலைக்கும், தனியார் பேருந்து சங்கங்களிற்கும் இடையில் பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகின்றன.
குறிப்பாக போக்குவரத்து அட்டவணை தயாரிப்பதில் இருந்து வீதிகளில் பிரயாணிகளை ஏற்றி இறக்குவது வரை போட்டி நிலையே காணப்படுகின்றது.
பிரயாணிகளை பேருந்தில் வைத்துக்கொண்டு போட்டி போட்டு ஓடுவது, இவ்வாறு வேகமாக ஓடும்போது இடையில் நிற்கும் பயணிகளை ஏற்றாமல் விட்டுச்செல்வது மற்றும் குறித்த தரிப்பிடங்களில் இறங்க வேண்டிய பிரயாணிகளை இறக்காது வேறு இடத்தில் இறக்குவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
இவ்வாறான செயல்களினால் வயோதிபர்கள், நோயாளிகள், குழந்தைகளுடன் பயணிக்;கும் தாய்மார் போன்றோர் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதுடன் சில சமயம் பாதிப்புக்களையும் எதிர்கொள்கின்றனர்.
எனவே இவ்வாறான செயல்கள் தொடரும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கையினை மேற்கொண்டு தண்டனைக்கு உட்படுத்துவதனூடாகவே இவற்றினை கட்டுப்படுத்த முடியும்.
மேலும் மத்திய அமைச்சர் என்ற வகையில் தாங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது எமது பிரதேசத்தின் அபிவிருத்தியையும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இறுதியாக எமது தமிழ் மக்களின் உரிமையினை இந்த அரசு உரிய கவனமெடுத்து தீர்;த்து வைக்குமாயின் எமது நாடு துரித கதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு நிகராக அபிவிருத்தி அடையும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. ஆகவே ' இனங்களுக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்புவதன் ஊடாக எமது நாட்டை கட்டியெழுப்புவோம்' என மேலும் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
March 16, 2015
Rating:

No comments:
Post a Comment