அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் துறையில் இருந்து மடுவிற்கான புகையிரத சேவையை 26 வருடங்களின் பின் ஆரம்பித்து வைத்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி

இலங்கைக்கு இரு நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று(13)வெள்ளிக்கிழமை வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று(14) சனிக்கிழமை மதியம் 12.27 மணியளவில் தலைமன்னார் துறை புகையிரத நிலையத்திற்கு வருகை தந்து தலைமன்னாரில் இருந்து மடுவிற்கான புகையிரத வேவையை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.
 இந்தியப் பிரமதர் நரேந்திரமோடி, 26 வருடங்களுக்குப் பின்னர் தலைமன்னாருக்கான ரயில் சேவையை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
இன்று சனிக்கிழமை காலை தலைமன்னார் பியர் பகுதிக்கு விசேட வானூர்தி மூலம் வருகை தந்த பிரதமர்  நரேந்திர மோடிக்கு மக்கள் திரண்டு அமோக வரவேற்றை வழங்கினர்.
பின் தலைமன்னார் துறை புகையிரத நிலையத்திற்குள் வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி மதியம் 12.27 மணியளவில் கொடி அசைத்து வைபவ ரீதிர்கு புகையிரத சேவையை ஆரம்பித்து வைத்தார்.
-புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்ட போது திடீர் என மழையும் பெய்ய ஆரம்பித்தது.
-புiகியரத சேவை ஆரம்பித்;து வைக்கப்பட்டதன் பின் மன்னார் மாவட்டம் மற்றும் வடமாகாண மக்கள்,மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
-குறித்த மகஜரை மன்னார் மறைமாவட்ட ஆயர்,வடமாகாண அமைச்சர்,வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கையளித்தனர்.
-குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்  எம்.வை.எஸ்.தேசபிரிய,மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை, கைத்தொழில் வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட் பதியூதீன்,போக்குரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி போக்குவரத்து அமைச்சர் எம்.எஸ்.முஹமட் தௌபீக்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அமைக்கலநாதன்,சிவசக்தி ஆனந்தன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஹீனைஸ் பாரூக்,முத்தலிப் பாபா பாரூக், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சின்கா, வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான எஸ்.பிறிமூஸ் சிராய்வா, அயூப் அஸ்மின், றிப்கான் பதியுதீன்,உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள்,உப தலைவர்கள் உறுப்பினர்கள் திணைக்கள உயர் அதிகாரிகள்  என பலர் கலந்து கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மகத்தான வரவேற்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.














தலைமன்னார் துறையில் இருந்து மடுவிற்கான புகையிரத சேவையை 26 வருடங்களின் பின் ஆரம்பித்து வைத்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி Reviewed by NEWMANNAR on March 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.