அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பட்டதாரிச் சேவையாளர்கள் என்ன கிள்ளுக்கீரைகளா..?-மன்னாரில் உள்ள பட்டதாரிகள் ஆதங்கம்.

மன்னார் மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கு கடந்த 02.07.2013 இல் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டு அவர்களைப் பணிக்கமர்த்திய அரசாங்கம் அவர்கள் படித்துப்பெற்ற பட்டங்களை மதிக்காது  செயற்படுவதை நினைக்கும்போது மிக்க கவலையாக இருக்கிறது என்று பட்டதாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஏறக்குறைய 16 ஆயிரம் பட்டதாரிகள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பிரதேச செயலகங்கள் மூலமாக  கிராமங்களுக்குப் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு தமது தகுதிக்கேற்ப அவர்களுக்குரிய வேலைகளையோ அல்லது மதிப்பையோ பெற முடியாத வகையில் அவர்களை கிராம சேவையாளர்களுக்கு கீழ்ப்பட்டவர்களாக நடத்த முற்பட்டதன் விளைவாக அவ்வவ் பிரதேச செயலாளர்களினாலும் செயலக ஊழியர்களினாலும் தராதரமற்றவர்களாக நோக்கப்பட்டுவருவதை எங்களால் சகிக்க முடியாதிருக்கின்றது என்று பட்டதாரிகள் விசனப்படுகிறார்கள்.

இவ் அங்கலாய்ப்பை கருத்தில் கொண்டு பட்டதாரிகளைத் தரம் உயர்த்தித் தருவதாகச் சொன்ன புதிய அரசாங்கம் விழுந்த மாட்டில் குறிவைப்பது போல வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சுக்குட்படுத்தியிருக்கிறது.

.அங்கும் அரசியலால் நியமனம் பெற்ற சமுர்த்தி ஊழியர்களுக்கு கீழ் பட்டதாரிகள் வேலை செய்யும் நிலைமையைத்தான் அரசாங்கம் கொண்டுவர எத்தனிப்பதாக பட்டதாரிகள் குமுறுகிறார்கள்..

அரசாங்கத்தால் ஐம்பதினாயிரம் பெற்று அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களைக் கூட பட்டதாரிகளுக்கு கிரமமாக வழங்காமல் சமுர்த்தி ஊழியர்களுக்கே வழங்கப்பட்ட விதம் விமர்சனத்திற்குட்பட்டுள்ளதெனவும் கூறுகின்றனர்..

இந்தப் பட்டதாரிகளுக்கான பொறுப்புக்கூறக்கூடிய அதிகாரங்களை கீழ்நிலைப்படுத்துவதோடல்லாமல் பட்டதாரிகளின் பிரச்சினைகளை யாரிடமும் சொல்ல முடியாத நிலைமை காணப்படுவதாலும் சமுர்த்தி உத்தியோகத்தர்களை நியமித்த அரசியல் வாதிகளுக்கும் அவர்களுக்கு பணிவிடை செய்தபிரதேச செயலாளர்கள் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் என்பவர்களும்கூட பட்டதாரிகளுக்கு உதவ மறுப்பதுடன்  அவர்களின் ளெரவத்தை மதிக்க மறுப்பதை நாம் எப்படிப் பார்த்துக் கொண்டிருக்க முடியும் எனக் கேட்கின்றனர்.

தமக்காகக் குரல் கொடுக்கக் கூடிய யாரும் இங்கு இல்லாத பட்சத்தில் நாங்கள் எமக்கான ளெரவத்தையும் மதிப்பையும் வென்றெடுக்க தொழிற்சங்க ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் படித்த இளைஞர்களின் எதிர்கால சுபிட்சம் கருதி அரசியலிலும் ஒரு காத்திரமான நிலையெடுப்பது பற்றியும் ஆலோசனை செய்து வருவதாகவும் எமக்குக்கூறினர்.    
மன்னாரில் பட்டதாரிச் சேவையாளர்கள் என்ன கிள்ளுக்கீரைகளா..?-மன்னாரில் உள்ள பட்டதாரிகள் ஆதங்கம். Reviewed by NEWMANNAR on March 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.