மன்மத வருட பிறப்பை கொண்டாடும் அனைவருக்கும் எமது மன்னார் இணையத்தின் தமிழ் சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
மன்மத வருட பிறப்பை கொண்டாடும் அனைவருக்கும் எமது மன்னார் இணையத்தின் தமிழ் சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கட்டும்.
இந்துப்பண்பாட்டின் முக்கிய கொண்டாட்டங்களின் ஒன்றான புத்தாண்டு இலங்கையில் மாத்திரமின்றி தமிழர்கள் பரந்துவாழும் உலக நாடுகள் பலவற்றிலும் கொண்டாடப்படுகிறது.
ராசி மண்டல வலயத்தில் உள்ள மேச ராசியில் சூரியன் உதயமாகும் தினமே தமிழ் இந்துக்களின் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.
சூரியன் மீண்டும் மேச ராசிக்கு வரும்வரையான காலம் ஒரு தமிழ் வருடம் எனவும் ஜோதிடம் கூறுகிறது.
இதற்கமைய ஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமாக இன்று (14) மன்மத வருடம் பிறக்கின்றது
வாக்கியம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கங்களின் அடிப்படையில் இருவேறு நேரங்களில தமிழ் சித்திரை புத்தாண்டு இன்று (14) மதியம் பிறக்கின்றது
தமிழ் ஆண்டுகளின் வரிசையில் 29ஆவது ஆண்டாக மன்மத ஆண்டு பெயரிடப்பட்டுள்ளது
மன்மத வருடத்தின் பலன் வெண்பா
மன்மதத்தின் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே
நன்மைமிகும் பல்பொருளுநண்ணுமே – மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு தென்திசையில் காற்றுமிகு
கானப்பொருள் குறையுங் காண்.
இந்த பலன் வெண்பாவிற்கு அமைய, மன்மத ஆண்டில் நன்மைகள் பல கிட்டும் ஆண்டாக இந்த ஆண்டு அமைகின்றது
மன்மத வருட பிறப்பை கொண்டாடும் அனைவருக்கும் எமது மன்னார் இணையத்தின் தமிழ் சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
Reviewed by NEWMANNAR
on
April 14, 2015
Rating:

No comments:
Post a Comment