வன்னி மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழுக்களின் இணைத் தலைவராக அமைச்சர் றிசாத் நியமனம்
மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களின் அபிவிருத்தி இணைப்பு குழுவின் இணைத் தலைவராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸி்ன் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்டங்களின் அபிவிருத்திக்கான திட்டங்களை வகுத்தல்,அரசாங்கத்தினாலும்,அரச சார்பற்ற நிறுவனங்களினாலும்இந்த மூன்று மாவட்டங்களிலும் முன்டுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை ஒழுங்குபடுத்தல்,அவதானித்தல்,மற்றும் பணிகளுக்கான அனுமதியினை வழங்கல் என்பன இந்த தலைமைத்துவத்தின் பணிகளாகும் என ஜனாதிபதி வழங்கியுள்ள இந்த நியமனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பான அறிவித்தல் கடிதங்கள் அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் றிசாத் பதியுதீன் கடந்த அரசாங்கத்திலும் வன்னி மாவட்டத்தின் அபிவிருத்தி குழுவின் தலைவராக இருந்து செயற்பட்டுவந்துள்ளார்.பிரதேச அபிவிருத்திக்குமான அனைத்து அங்கீகாரமும் அவரினாலேயே வழங்கப்பட்டு வந்துள்ளதாக பிரதேச செயலாளர்கள் தெரிவித்தனர்.
மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்டங்களில் கிராமங்களினதும்,பிரதேசங்களினதும் தேவைப்பாடுகள் அவற்றை நடை முறைக்கு கொண்டுவருவதற்கான அலோசனைகள் மற்றும் திட்டங்கள் மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு சமர்பிக்கப்பட்டதன் பின்னரே உரிய அமைச்சுக்களுக்கும்,நிறுவனங்களுக்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற.கு அனுமதி வழங்கப்படும்.அந்த வகையில் ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் அமைச்சர் றிசாத் பதியுதீனை மீண்டும் ஜனாதிபதி மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களுக்கான தலைவராக ஜனாதிபதி நியமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வன்னி மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழுக்களின் இணைத் தலைவராக அமைச்சர் றிசாத் நியமனம்
Reviewed by NEWMANNAR
on
April 12, 2015
Rating:
.jpg)
No comments:
Post a Comment