மன்னார் முருங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள பிரச்சினைகள் விரைவில் தீர்த்தது வைக்கப்படும்-வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்.-Photos
மன்னார் முருங்கன் வைத்தியசாலைக்கு நேற்று(11) சனிக்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் குறித்த வைத்தியில் உள்ள குறைபாடுகளை விரைவில் நிவர்த்தி செய்ய மாகாண மற்றும் மத்திய சுகாதார அமைச்சர்களுடன் விசேட சந்திப்பை நிகழ்த்தவுள்ளதாக தெரிவித்தார்.
முருங்கன் ஆதார வைத்தியசாலைக்கு நேற்று சனிக்கிழமை காலை திடீர் விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் வட மாகாண சபையின் மன்னார் மாவட்ட உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் ஆகியோர் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் பிரசன்னா சிங்கராயர் அவர்களை சந்தித்து அங்குள்ள குறைகள் மற்றும் ஊழியர் பற்றாக்குறை அங்கு வருகின்ற நோயாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் விடுதிகளையும் நேரடியாக பார்வையிட்டார்கள்.
அவ்வேளை கருத்து தெரிவித்த அமைச்சர் விரைவில் மாகாண மற்றும் மத்திய சுகாதார அமைச்சர்களுக்கு இப்பிரச்சினை தொடர்பில் தெரிவித்து உடனடி தீர்வு வழங்க தான் ஆவனம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மன்னார் முருங்கன் ஆதார வைத்தியசாலையில் உள்ள பிரச்சினைகள் விரைவில் தீர்த்தது வைக்கப்படும்-வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்.-Photos
Reviewed by NEWMANNAR
on
April 12, 2015
Rating:

No comments:
Post a Comment