அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு


வடக்கு கடற்பிரதேசத்தினுள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த மாதத்தின் முற்பகுதியில் கைதான இந்திய மீனவர்கள் 37 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் பிரவேசித்த 37 இந்திய மீனவர்கள் கடந்த 3 ஆம் திகதி கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன் இந்த மீனவர்களின் 5 மீன்பிடி படகுகளும் படற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

அதன் பின்னர் கடந்த 4 ஆம் திகதி சனிக்கிழமை பருத்தித்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
வடக்கு கடற்பரப்பில் கைதான தமிழக மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு Reviewed by NEWMANNAR on April 17, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.