புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 24 பேர் காயம்
புத்தளம், மாம்புரி பகுதியில் தனியார் பஸ் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் என்பன மோதிக்கொண்டதில் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (17) அதிகாலை 4.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கற்பிட்டியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸின் பின்புறமாக, கல்பிட்டியில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் மோதியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
விபத்தில் காயமடைந்தவர்களில் 12 பெண்களும், 3 சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
காயமடைந்தவர்கள் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 24 பேர் காயம்
Reviewed by NEWMANNAR
on
April 17, 2015
Rating:

No comments:
Post a Comment