அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஆயரின் 75 ஆவது பிறந்த தினமான இன்று மன்னார் ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் நற்கருணை நாதர் ஆலயம் திறந்து வைப்பு.-Photos

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களின் 75 ஆவது பிறந்த தினமான இன்று வியாழக்கிழமை(16) மன்னார் ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நற்கருணை நாதர் ஆலயம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகையின் தலைமையில் யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம்,திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை,மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை,பதுளை மறைமாவட்ட ஆயர் வின்ஸ்டன் பெனான்டோ,கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெனான்டோ ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இன்று காலை 7 மணியளவில் ஜோசப்வாஸ் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியில் இருந்து குறி;த்த 06 மறைமாவட்ட ஆயர்களும் மக்களினால் வரவேற்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின் மன்னார் மாறைமாவட்ட ஆயர் தலைமையில் ஏனைய 5 ஆயர்களும் இணைந்து நாடாவை வெட்டி ஆலயத்தை திறந்து வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

குறித்த ஆலய திறப்பு விழா நிகழ்வில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சிவசக்தி ஆனந்தன்,வினோ நோகராதலிங்கம் ,வடமாகாண சபை உறுப்பினர்கள்,பிரதேசச் செயலாளர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள்,உபதலைவர்கள்,உறுப்பினர்கள்,அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள் உற்பட பல ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.ஆலய திறப்புவிழாவிற்கான ஏற்பாடுகளை ஜோசப்வாஸ் நகர் பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோனி றொக்சன் குரூஸ் மேற்கொண்டிருந்தார்.

இருதியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்கூறிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களின் 75 ஆவது பிறந்த தினம் ஆலயத்தில் கொண்டாடப்பட்டது.

75 சிறுவர்கள் தீபங்களை ஏற்றி வலம் வந்த நிலையில் ஆயர் அவர்கள் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

























மன்னார் ஆயரின் 75 ஆவது பிறந்த தினமான இன்று மன்னார் ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் நற்கருணை நாதர் ஆலயம் திறந்து வைப்பு.-Photos Reviewed by NEWMANNAR on April 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.