வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைமைக்காரியாலயம் சம்பிரதாய பூர்வமாக மன்னாரில் திறந்துவைப்பு.-Photos
வடக்கில் வாழும் முஸ்லீம் மக்களது பிரச்சினைகள் சவால்கள் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் எடுத்துரைக்கும் ஒரு முக்கிய நிலையமாக இயங்க உள்ள வடமாகாண முஸ்லிம் பிரஜைகளுக்கான குழுவின் Northern Muslim Citizens Committee (NMCC) பிரதான காரியாலயம் ஏ.எச்.எம்.முபாரக் மௌலவி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை(10) மாலை மன்னாரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைமைக் காரியாலயத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றினார்.
இதன் போது குறித்த நிலையத்தின் பணிப்பாளர் நிஹ்மத்துல்லா,தலைவர் ஏ.எச் எம்.முபாரக் மௌலவி, செயலாளர் ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் ஹிதாயத்துல்லா மௌலவி, ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழுவின் தலைமைக்காரியாலயம் சம்பிரதாய பூர்வமாக மன்னாரில் திறந்துவைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
April 11, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 11, 2015
Rating:





No comments:
Post a Comment