அண்மைய செய்திகள்

recent
-

உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு உடற்பயிற்சி உபகரணங்களை வழங்கி வைத்த வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்.-Photos



மன்னார் கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளுக்கான வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் கடந்த வியாழன்(9) முதல் நேற்று சனிக்கிழமை(11) வரையிலான மூன்று தினங்கள் மன்னார் முருங்கன் ம.வி பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இப்போட்டிகளில் மன்னார்,நானாட்டான்,முசலி கோட்டப் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

-குறித்த நிகழ்வின் இருதிப்போட்டிகள் நேற்று சனிக்கிழமை(11) மாலை இடம் பெற்றது.குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் கலந்து சிறப்பித்தார்.

இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து 2 இலட்சம் ரூபாய் நீதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட உடற்பயிற்சி உபகரணங்களை மன்னார் மாவட்டத்தில் உள்ள 45 உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கி வைத்தார்.

மன்னார் மாவட்ட வரலாற்றில் முதல் தடவையாக எவரும் செய்யாத ஒரு திட்டத்தை செயற்படுத்தியமையையிட்டு மன்னார் மாவட்ட கல்வி சமூகம் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு உடற்பயிற்சி உபகரணங்களை வழங்கி வைத்த வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்.-Photos Reviewed by NEWMANNAR on April 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.