அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் காட்டு யானைகளின் தொல்லை.-Photos


மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலியாறு உற்பட பல கிராமங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும்,காட்டு யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவதில்லை என அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தின் காரணமாக இடம் பெயர்ந்து சென்ற மக்கள் மீண்டும் மீள் குடியேறியுள்ள நிலையில் குறித்த பகுதிகளில் விவசாயம் மற்றும் தோட்டச் செய்கை மூலம் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

-இந்த நிலையில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலியாறு உற்பட சில கிராமங்களுக்குள் செல்லும் காட்டு யானைகள் விவசாய செய்கையினை சேதப்படுத்துவதோடு வீடுகளில் உள்ள தென்னை,வாழை போன்ற மரங்களையும் தொடர்ச்சியாக நாசப்படுத்துவதாக அந்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


வயது முதிர்ந்த சில யானைகலே மக்களின் குடியிறுப்பு பகுதிக்குள் வந்து அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது.எனவே யானைகளினால் ஏற்படும் பாதீப்புக்களை நிவர்த்தி செய்ய மாந்தை மேற்க பிரதேசச் செயலாளர் உற்பட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்றகொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.






மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் காட்டு யானைகளின் தொல்லை.-Photos Reviewed by NEWMANNAR on April 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.