வட மாகாண மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து மகஜர் கையளித்த வட மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன்.-Photos
வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனையான இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பாகவும் எமது மீனவர்கள் எதிர் கொள்ளும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை(2) மாலை 2 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பு இடம்பெற்றது.
இச் சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்,பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாணத்தின் மீனவர் சமாசங்களின் தலைவர்கள் மற்றும் இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விசேட ஒன்றுகூடலில் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி வருகின்ற இந்திய மீனவர்களின் இழுவைப்படகுகளால் தினந்தோறும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும், அத்தோடு எமது மீனவர்கள் பயன்படுத்தும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளால் எமது கடல் வளம் நாளுக்கு நாள் அழிவடைந்து வருவதை தடுக்கும் செயல்த்திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சரால் விசேட மகஜர் ஒன்றும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வட மாகாண மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து மகஜர் கையளித்த வட மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன்.-Photos
Reviewed by NEWMANNAR
on
April 03, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 03, 2015
Rating:



No comments:
Post a Comment