அண்மைய செய்திகள்

recent
-

சிகிரியாவில் கிறுக்கிய மட்டக்களப்பு யுவதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு


சிகிரியா கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய மட்டக்களப்பு யுவதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார். குறித்த யுவதிக்கு மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் கையொப்பமிட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் 14ம் திகதி சிகிரியாவிற்கு சுற்றுலாச் சென்ற யுவதி, அங்குள்ள கண்ணாடிச் சுவரில் கிறுக்கியிருந்தார்.


குறித்த யுவதியை காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றில் ஆஜர் செய்திருந்தனர். நீதிமன்றம் குறித்த யுவதிக்கு இரண்டாண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்திருந்தது.


23 வயதான சின்னத்தம்பி உதேனி என்பவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டிருந்தார். மன்னிப்பு வழங்குமாறு பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையை அடுத்து ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
சிகிரியாவில் கிறுக்கிய மட்டக்களப்பு யுவதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு Reviewed by NEWMANNAR on April 02, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.