அண்மைய செய்திகள்

recent
-

சூரியன் உதிப்பதும் மறைவதும் உங்களால் தான் சேர்: மயங்கி கவிழ்ந்தார் மஹிந்த


கடந்த அரசாங்கத்தில் இருந்த முக்கியஸ்தர்கள் சேர் சேர் என்று கூறியே மஹிந்த ராஜபக்ஷவை கவிழ்த்துவிட்டனர். ஆனால் நான் பல இடங்களில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து குரல் கொடுத்துள்ளேன் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், கடந்த அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் புகழ்பாடியே பலர் செயற்பட்டனர். அவரும் அந்த புகழ்ச்சிக்கு மயங்கி இருந்தார். சூரியன் உதித்ததும் உங்களால்தான் சேர், சூரியன் மறைவதும் உங்களால்தான் சேர் , அனைத்தும் உங்களினால்தான் நடக்குது சேர் என்று மஹிந்தவை சுற்றி இருந்தவர்கள் கூறிவந்தனர். ஒருவர் அவருக்ககாக பாடினார். ஒருவர் கவிதை எழுதினார். மஹிந்தவை மன்னர் என்றும் கூறினர். மஹிந்த கடந்த தேர்தலில் வெற்றிபெற்றிருந்தால் கிரீடம் ஒன்றையும் அணிவித்திருப்பர். இவ்வாறு சேர் சேர் என்று கூறியே மஹிந்த ராஜபக்ஷவை கடந்த அரசாங்கத்தில் இருந்த முக்கியஸ்தர்கள் கவிழ்த்துவிட்டனர். ஆனால் நான் பல இடங்களில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து குரல் கொடுத்துள்ளேன். தேசிய பிரச்சினை விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கையை நான் விமர்சித்தேன். இன்று மஹிந்தவுக்காக குரல் கொடுப்பவர்கள் அன்று விமர்சிக்கவில்லை. மாறாக புகழ்பாடினர். ஆனால் இறுதியில் என்ன நடந்தது?
சூரியன் உதிப்பதும் மறைவதும் உங்களால் தான் சேர்: மயங்கி கவிழ்ந்தார் மஹிந்த Reviewed by Author on May 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.