உலகில் 75 வீத பணியாளருக்கு வேலை ஒப்பந்தம் இல்லை
உலகம் முழுவதி லும் உள்ள பணியா ளர்களில் சுமார் 75 சதவீதம் பேருக்கு முறையான வேலை ஒப்பந்தம் இல்லை யென்று ஐக்கிய நாடு களின் சர்வதேச தொழி லாளர் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
பெரும்பாலான தொழி லாளர்கள் பகுதி நேர மாக வேலை செய் கின்றனர் அல்லது குறுகிய காலப்பகுதிகளுக்கு பணி அமர்த்தப்படுகின்றனர் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. இவர்களுக்கு ஒய்வு ஊதியம் உள் ளிட்ட பணி தொடர்பான உரிமைகள் கிடைப்பதில்லை.
விவசாயம், உணவுப் பதனிடுதல், கட்டுமானம் போன்ற பல தொழில்க ளில் வேலை செய்வோருக்கு பணி உத்திரவாதம் இல்லாமல் உள்ளது. வேலை செய்யும்போது இறந்து போகும் தொழிலாளர்களுக்குக் கூட பல நேரங்களில் நிவாரணம் கிடைப்பதில்லை.
வேலை நியமனம் தொடர்பான சட்டங்களில் இருக்கும் நெகிழ்வுத் தன்மை காரணமாக புதிதாக வேலைக்கு சேர்வோர் பயனடைந்தாலும், இது போன்ற சட்டங்களால் நீண்ட காலத் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை இருப்பதாகவும் அந் நிறுவனம் கூறுகிறது.
உலகில் 75 வீத பணியாளருக்கு வேலை ஒப்பந்தம் இல்லை
Reviewed by Author
on
May 20, 2015
Rating:
Reviewed by Author
on
May 20, 2015
Rating:

No comments:
Post a Comment