பலியிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவுகூருதல் அவசியம் : விஜயகலா மகேஸ்வரன்

இறுதியுத்தத்தில் கொன்று குவிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூர்ந்து இன்று நடைபெறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்துத் தமிழ் மக்களும் பங்கேற்று உயிரிழந்த தமிழ் மக்களின் ஆன்மா ஈடேற்றத்திற்காக பிரார்த்திக்கவேண்டியது அவசியமானதாகும் என்று மகளிர்விவகார பிரதி அமைச்சரும்இ ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
2009ஆம் ஆண்டு முற்பகுதியில் இடம் பெற்ற இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான எமது உறவுகள் கொன்று குவிக்கப்பட்டனர். பெருமளவானோர் அங்கவீனர்களாகவும், காயமடைந்தவர்களாக வும் மாற்றப்பட்டனர். பெருமளவானோர் காணாமல் போயுள்ளனர். இவ்வாறு பேரவலம் ஏற்பட்டு இன்றுடன் 6 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன.
இந்த பேரவலத்தில் உயிரிழந்த எமது ஒவ்வொரு உறவையும் நாம் நினைவுகூரவேண்டும். அது எமது தார்மீக கடமையா கும்.
உயிரிழந்த அப்பாவி மக்களைக்கூட நினைவுகூர முடியாத அச்சமான சூழ்நிலை கடந்த அரசாங்க காலத்தில் இருந்தது. உயிரி ழந்தவர்களை நினைவுகூர்ந்தால் அவர்களை யும் புலிகள் எனக்கூறி தண்டிக்கும் காலம் கடந்த ஐந்து வருடங்களாக நிலவி வந்தது.
தற்போதைய அரசாங்கமானது உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூரலாம் என அனுமதி வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். மஹிந்தராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் யுத்த வெற்றிவிழா கொண்டாடப்பட்டது. தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு அவர்களது உறவினர்கள் துயர் தோய்ந்திருந்த நிலையில் அந்த மக்களது மனதை புண்படுத்தும் வகையிலேயே கடந்த அரசாங்கமானது இராணுவக் கவச வாகனங்களையும் போர்விமானங்களையும் காட்சிப்படுத்தி வெற்றிவிழாக்களை கொண்டாடியிருந்தது.
தற்போதைய அரசாங்கமானது வெற்றிவிழா என்ற பெயரில் இத்தகைய நிகழ்வை ஏற்பாடு செய்யாது பிரிவினைக்கு எதிரான நிகழ்ச்சியாகவே இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. உண்மையிலேயே பலியிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உறவுகள் என்றும் தமது உறவுகளை எண்ணி கண்ணீர் வடித்தபடியே சோகத்துடன் வாழ்கின்றன. இந்த மக்களின் சோகத்தில் நானும் பங்கேற்றுக் கொள்கின்றேன். இன்றயை தினம் வடக்குஇ கிழக்கு உட்பட தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இந்த முள்ளிவாய்க்கால் நினை வேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடத் தப்படவேண்டும்.
இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்புக் களை வழங்கவேண்டும். அமைதியான முறையில் பலியான தமது உறவுகளை நினைவேந்தல் செய்வதற்கு சகலருக்குமே உரிமை உள்ளது. இந்த நினைவேந்தலிலும் மக்களின் சோகத்திலும்இ நானும் பங்கேற் றுக்கொள்கின்றேன்.
பலியிடப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவுகூருதல் அவசியம் : விஜயகலா மகேஸ்வரன்
Reviewed by Author
on
May 18, 2015
Rating:

No comments:
Post a Comment