சம்பூர் மீள்குடியேற்றத்தில் இரட்டை வேடம் வேண்டாம் : சுரேஷ் எம்.பி.

சம்பூர் மக்களை அவர்களுடைய சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றும் விடயம் தொடர்பாக அரசாங்கம் இரட்டை வேடம் போடவேண்டிய அவசியமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல் மற்றும் எமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியின் பிரகாரம் அடுத்த ஒருவார காலத்தினுள் அவர்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும்.
தவ றின் மக்கள் தமது அடிப்படை உரிமைகளுக்காக ஜனநாயக போராட்டத்தில் குதிக்க வேண்டியேற்படும் எனவும் குறிப்பிட்டார்.
வர்த்தமானி அறிவித்தல் வெளி யான பின்னரும் சம்பூர் மக்களின் மீள்குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர்மேலும்தெரிவித்ததாவது,
திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பிரதேசத்தில் உள்ள மக்கள் குடியிருப்பு காணிகளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு வழங்கியிருந்தது.
அக்காணிகளில் ஒரு பகுதியை மக்களிடத்தில் கையளிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த எட்டாம் திகதி கைச்சாத்திட்டிருந்தார்.
அதன் பிரகாரம் 207 குடும்பங்களை முதற்கட்டமாக குடியேற்றுவதெனவும் தொடர்ந்து கடற்படை பயிற்சி முகாம் அமைந்துள்ள 224 மக்கள் குடியிருப்பு காணிகளை ஐந்து மாத காலத்தினுள் விடுவிப்பதாகவும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறான நிலையில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் ஊடாக சம்பூர் பிரதேசத்தில் தமது முதலீடுகளை மேற்கொள்வதற்காக முன்வந்திருந்த தனியார் நிறுவனமொன்று தற்போது அந்நிலங்களை தமக்கு சொந்தமெனக்கூறி மக்கள் குடியேற்றுவதை தடுக்கும் வகையில் நீதிமன்ற தற்காலிக தடை யுத்தரவொன்றை பெற்றிருக்கின்றது.
ஒரு நாட்டின் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலைச் செய்த பின்னர் அதனை எவ்வாறு தடுத்து நிறுத்த முடியும் என்பது இங்கு பெரும் கேள்விக்குறியாக இருக்கின்றது. ஒரு பக்கத்தில் எம்மிடமும்இ சர்வதேசத்திடமும் தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்தை நாம் விரைவாக செய்து வருகின்றோம் எனத் தொடர்ச்சியாக கூறிக்கொண் டிருக்கும் அரசாங்கம் மறுபக்கத் தில் காணிகளை விடுவிக்கும் அறிவித்தலை வழங்கிவிட்டு பின்னர் அதனை தடுக்கும் வகையிலான செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றது.
புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அறிவித்திருந்த நூறுநாள் வேலைத்திட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின்படி சம்பூர் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் தற்போதுவரையில் அக்காணிகள் மக்க ளிடம் கையளிக்கப்படாத நிலைமையே தொடர்கின்றது.
2006ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து இன்றும் முகாம் வாழ்க்கையை தொடர்ந்து கொண்டிருக்கும் மக்களை கருத்தில் கொள்ளுங்கள். அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியின் பிரகாரம் மீளக்குடியேற்றுங்கள். மக்களின் அடிப்படை விடயங்களில் இரட்டை வேடம் போடுவது பொருத்தமானதல்ல என்றார்.
சம்பூர் மீள்குடியேற்றத்தில் இரட்டை வேடம் வேண்டாம் : சுரேஷ் எம்.பி.
Reviewed by Author
on
May 18, 2015
Rating:

No comments:
Post a Comment