தகவல் அறியும் சட்டமூலத்தை கொண்டுவருமாறு கோரிக்கை
தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டுவருமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த சட்டமூலத்துக்கு சுதந்திரக் கட்சி முழுமையான ஆதரவினை வழங்கும் என்றும் எனவே உடனடியாக அதனை பாராளுமன்றத்துக்கு கொண்டுவருமாறு வலியுறுத்துவதாகவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இந்த விடயத்தை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்துக்கு கொண்டுவருமாறு கோரிக்கை விடுக்கின்றோம். அந்த சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். எனவே அதனை விரைவாக பாராளுமன்றத்துக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதேவேளை எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்திடம் நாங்கள் முறைப்பாடு செய்வதில் எந்த மாற்றமும் இல்லை. அதனை நாங்கள் விரைவில் செய்யவுள்ளோம் என்றார்.
தகவல் அறியும் சட்டமூலத்தை கொண்டுவருமாறு கோரிக்கை
Reviewed by Author
on
May 21, 2015
Rating:
Reviewed by Author
on
May 21, 2015
Rating:

No comments:
Post a Comment