யுத்தத்தின் போது உயிரிழந்த இராணுவ வீரர்கள் மீண்டும் ஒருமுறை பிறக்க வேண்டும் : ஜனாதிபதி மைத்திரி
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த இராணுவ வீரர்கள் மீண் டும் ஒருமுறை பிறக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று பத்தரமுல்லையில் உள்ள இறுதிக் கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த இராணுவத்தினரின் நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போதே அவர் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான கரு ஜயசூரிய, ஏ.எச்.எம் பௌஸி, ரவி கருணாநாயக்க, சஜித் பிரேமதாஸ, பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமது உறவுகளை பிரிந்து சென்று நாட்டிற்காக இராணுவத்தினர் போராடினர். அவர்களுக்கு இறந்த பின்பே நம்மால் அஞ்சலி செய்ய முடிந்துள்ளது.
சுதந்திர காற்றை மீண்டும் சுவாசிக்க இலங்கையருக்கு வழி செய்த இராணுவத்தினர் மீண்டும் பிறக்கவேண்டும் என்றார்.
யுத்தத்தின் போது உயிரிழந்த இராணுவ வீரர்கள் மீண்டும் ஒருமுறை பிறக்க வேண்டும் : ஜனாதிபதி மைத்திரி
Reviewed by Author
on
May 21, 2015
Rating:
Reviewed by Author
on
May 21, 2015
Rating:

No comments:
Post a Comment