வட மாகாணத்தில் 14 நாட்களில் 10 மாணவிகள் மீது துஷ்பிரயோகம்
வடமாகாணத்தில் கடந்த 14 நாட்களில் மாத்திரம் 10 பாடசாலை மாணவிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று அதிர்ச்சித் தகவலை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வெளி நபர்களினால் இவ்வாறான பாலியல் துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார். அத்துடன் பாடசாலைகளில் கற்பிக்கும் கொடுக்கும் ஒருசில ஆசிரியர்களினாலும் மாணவிகள் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுவது கவலை யளிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வட மாகாணத்தில் 14 நாட்களில் 10 மாணவிகள் மீது துஷ்பிரயோகம்
Reviewed by Author
on
May 31, 2015
Rating:
Reviewed by Author
on
May 31, 2015
Rating:

No comments:
Post a Comment