திருமண நாளன்று மணக்கோலத்தில் தேர்வு எழுதிய புதுமைப் பெண்
தேனியில் ஆசிரியர் பட்டய தேர்வுக்கு புதிதாக மணமான இளம்பெண் ஒருவர் மணக்கோலத்தில் தேர்வு எழுதியுள்ளார்.
தேனி அருகே உள்ள போடி பகுதியை சேர்ந்த காவியப்ரியா என்ற பெண் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 2–ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் நேற்று அவருக்கு திருமணம் நடைபெற்றது.
திருமண நாளில் தேர்வு நடைபெற இருந்த விவரம் பெண்ணின் பெற்றோர் மூலம் மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்களும் திருமணம் முடிந்ததும் தேர்வு எழுதட்டும் என்று அனுமதியளித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை போடியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், திருமணம் முடிந்ததும் மணக்கோலத்தில் தேர்வு மையமான உத்தமபாளையததில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு மணப்பெண்ணை அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவர் மணக்கோலத்தில் ஆசிரியர் பட்டய தேர்வினை எழுதியுள்ளார்.
இதுகுறித்து காவியப்ரியா கூறுகையில் திருமணத்துக்கு முன்னதாக தேதி குறிக்கப்பட்டதால் எனது கணவர் வீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிந்து உடனே தேர்வு எழுத வந்தேன்.
மேலும், பாடங்களை முன்கூட்டியே படித்து இருந்ததால் பதட்டம் இல்லாமல் தேர்வு எழுதினேன் என்றும் இந்த அனுபவத்தை எனது வாழ்நாளில் மறக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
திருமண நாளன்று மணக்கோலத்தில் தேர்வு எழுதிய புதுமைப் பெண்
Reviewed by Author
on
May 23, 2015
Rating:
Reviewed by Author
on
May 23, 2015
Rating:

No comments:
Post a Comment