அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச ஒலிம்பிக் செயலமர்வுக்காக கிறீஸிற்கு செல்லும் மன்னார் மாணவனுக்கு ''லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிதியம்'' நிதி உதவி.-Photos



சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் ஏற்பாட்டில் 55 ஆவது சர்வதேச ஒலிம்பிக் செயலமர்வு கிறீஸில் இம்மாதம் 23 ஆம் திகதி முதல் இடம் பெறவுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மரியான் அன்ரனிஸ் என்ற மாணவன் இலங்கையின் சார்பாக கிறீஸிற்கு பயணமாகவுள்ளார்.

மன்னார் சிறிய குருமட வீதியைச் சேர்ந்த மரியான் அன்ரனிஸ் என்ற மாணவன் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்று பல்கலைக்கழக அனுமதி பெற்று,யாழ் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்று வருகின்றார்.

குறித்த மாணவன் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் ஏற்பாட்டில் 55 ஆவது சர்வதேச ஒலிம்பிக் செயலமர்வு இம்மாதம் 23 ஆம் திகதி முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி (06-06-2015) வரை கிறீஸில் இடம் பெறவுள்ள நிலையில் இலங்கையில் இருந்து குறித்த ஒலிம்பிக் நிகழ்வுக்கு கிறீஸில் தடம் பதிக்கும் ஒரே ஒரு தமிழனாவர்.

இந்த நிலையில் குறித்த மாணவனை கௌரவப்படுத்தும் வகையிலும் குறித்த மாணவனின் வெளிநாட்டு பயணத்திற்கு உதவிடும் வகையில் லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிதியத்தின் மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் முதற்கட்டமாக ஒரு தொகுதி நிதி உதவி இன்று (15) வெள்ளிக்கிழமை மாலை மன்னார் அலுவலகத்தில் வைத்து மாவட்ட இணைப்பாளர் எஸ்.கேதீஸ்வரன் மற்றும் மடு பிரதேசச் செயலாளர் எப்.சி.சத்திய சோதி ஆகியோர் இணைந்து குறித்த நிதி உதவியை வழங்கி வைத்தனர்.









சர்வதேச ஒலிம்பிக் செயலமர்வுக்காக கிறீஸிற்கு செல்லும் மன்னார் மாணவனுக்கு ''லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிதியம்'' நிதி உதவி.-Photos Reviewed by NEWMANNAR on May 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.