புங்குடுதீவு மாணவியை படுகொலை செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் : மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் கண்டனம்
புங்குடுதீவு மாணவி வித்தியாவை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி கொலை செய்த குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தகுந்த தண்டனை வழங்கி இவர்களைப் போன்ற சமூக விரோதிகளுக்கு பாடத்தைப் புகட்ட வேண்டும் என மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் கே. சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மாணவி வித்தியா சமூக விரோதிகளால் மிருகத்தனமான முறையில் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் வன்மையாகக் கண்டிக்கின்றது. மகளை இழந்து தவிக்கின்ற அவரது பெற்றோருக்கு வார்த்தைகளால் ஆறுதல் கூற முடியாது என்றாலும்இ அவர்களின் வேதனையில் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் பங்கு கொள்கின்றது.
இவ்வாறான சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற கொடியவர்களுக்கு தகுந்த பாடத்தைப் புகட்டும் வகையில் நீதிமன்றம் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும். யுத்தத்தின் கோரப் பிடியிலிருந்து விலகி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் போது, இத்தகைய கொடூரச் செயல்கள் மக்களை மேலும் துயரத்தில் தள்ளி விடுகின்றது.
கொலை செய்யப்பட்ட மாணவியின் சார்பில் வட மாகாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் ஓய்வு பெற்ற நீதிபதிகளும் இலவசமாக வாதாட முன்வந்திருப்பது சமூகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள அபிமானத்தை எடுத்துக் காட்டுகின்றது. குற்றவாளிகளுக்கு ஆகக் கூடுதலான தண்டனையைப் பெற்றுக் கொடுத்து சமூகத்தில் குற்றச் செயல்கள் பெருகாமல் இருக்க வழிகாட்ட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவியை படுகொலை செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் : மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் கண்டனம்
Reviewed by Author
on
May 22, 2015
Rating:
Reviewed by Author
on
May 22, 2015
Rating:

No comments:
Post a Comment